கட்டமைப்பு துறை சார்ந்த பரஸ்பர நிதித் திட்டங்களில் அன்னிய தனி நபர்கள் முதலீட்டிற்கு அனுமதிகட்டமைப்பு துறை சார்ந்த பரஸ்பர நிதித் திட்டங்களில் அன்னிய தனி நபர்கள் ... ... ஆறு வர்த்தக தினங்களுக்குப் பிறகு'சென்செக்ஸ்' 273 புள்ளிகள் அதிகரிப்பு ஆறு வர்த்தக தினங்களுக்குப் பிறகு'சென்செக்ஸ்' 273 புள்ளிகள் அதிகரிப்பு ...
30 மாதங்களில் இல்லாத சரிவு நிலை ஜூலை மாதத்தில் கார் விற்பனை 15.76 சதவீதம் குறைவு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

11 ஆக
2011
00:05

புதுடில்லி: நடப்பு 2011ம் ஆண்டு ஜூலை மாதத்தில், நாட்டில் கார் விற்பனை கடந்தாண்டு ஜூலை மாதத்தை விட, 15.76 சதவீதம் சரிவடைந்துள்ளது. இது, கடந்த 30 மாதங்களுக்கு பிறகு ஏற்பட்டுள்ள குறைந்த அளவாகும். சென்ற ஜூலை மாதத்தில் ஒட்டு மொத்த அளவில் 1 லட்சத்து 33 ஆயிரத்து 747 கார்கள் விற்பனை ஆகியுள்ளன. அதே சமயம், கடந்த ஆண்டு ஜூலை மாதத்தில், இந்த எண்ணிக்கை 1 லட்சத்து 58 ஆயிரத்து 767 ஆக இருந்தது என இந்திய மோட்டார் வாகனங்கள் தயாரிப்பாளர்கள் சங்கம் (சியாம்) வெளியிட்டுள்ள புள்ளி விவரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து சியாம் அமைப்பின் தலைமை இயக்குனர் விஷ்ணு மாத்தூர் கூறுகையில்,'2009ம் ஆண்டு ஜனவரி மாதத்திற்கு பிறகு, கார்கள் விற்பனை ஜூலை மாதத்தில் தான்,இந்த அளவிற்கு குறைந்துள்ளது. வட்டி செலவினம் அதிகரிப்பு, எரிபொருள்கள் விலை உயர்வு போன்றவற்றால், கடந்த ஒரு சில மாதங்களாக கார் விற்பனை வளர்ச்சியில் சரிவு நிலை ஏற்பட்டுள்ளது. 2008ம் ஆண்டு நவம்பர் மாதத்தில், கார் விற்பனை 19.34 சதவீதம் சரிவடைந்திருந்தது. அதற்கு பிறகு, ஜூலை மாதத்தில்தான் இந்த அளவிற்கு, விற்பனையில் சரிவு நிலை ஏற்பட்டுள்ளது' என்று தெரிவித்தார்.இருப்பினும், சென்ற ஜூலை மாதத்தில் இருசக்கர வாகனங்கள் விற்பனை, 12.61 சதவீதம் அதிகரித்துள்ளது. கடந்த 2010ம் ஆண்டு ஜூலை மாதத்தில், இரு சக்கர வாகனங்கள் விற்பனை, 9 லட்சத்து 38 ஆயிரத்து 514 ஆக இருந்தது. இது, சென்ற ஜூலை மாதத்தில், 10 லட்சத்து 56 ஆயிரத்து 906 ஆக வளர்ச்சி கண்டுள்ளது.இதே மாதங்களில் மோட்டார் சைக்கிள்கள் விற்பனை, 10.51 சதவீதம் வளர்ச்சி கண்டு, 7 லட்சத்து 10 ஆயிரத்து 621 என்ற எண்ணிக்கையிலிருந்து, 7 லட்சத்து 85 ஆயிரத்து 278 ஆக அதிகரித்துள்ளது.ஹீரோ மோட்டோகார்ப் (முன்பு ஹீரோ ஹோண்டா) நிறுவனத்தின் வாகனங்கள் விற்பனை, ஜூலை மாதத்தில், 13.89 சதவீதம் உயர்ந்து, 4 லட்சத்து 43 ஆயிரத்து 948 ஆக அதிகரித்துள்ளது. பஜாஜ் ஆட்டோ நிறுவனத்தின் வாகனங்கள் விற்பனை, 5.30 சதவீதம் உயர்ந்து 2 லட்சத்து 2 ஆயிரத்து 326 ஆக வளர்ச்சி கண்டுள்ளது.ஹோண்டா மோட்டார் சைக்கிள் அண்டு ஸ்கூட்டர் இந்தியா (எச்.எம்.எஸ்.ஐ) நிறுவனத்தின் மோட்டார் சைக்கிகள் விற்பனை, 6.52 சதவீதம் குறைந்து, 51 ஆயிரத்து 920 ஆக சரிவடைந்துள்ளது. அதேசமயம், டி.வி.எஸ். நிறுவனத்தின் மோட்டார் சைக்கிள்கள் விற்பனை, 9.58 சதவீதம் உயர்ந்து, 48 ஆயிரத்து 91 ஆக அதிகரித்துள்ளது.ஒட்டு மொத்த ஸ்கூட்டர்கள் விற்பனை, இதே மாதங்களில், 23.03 சதவீதம் வளர்ச்சி கண்டு, 1 லட்சத்து 67 ஆயிரத்து 195 என்ற எண்ணிக்கையிலிருந்து, 2 லட்சத்து 5 ஆயிரத்து 695 ஆக உயர்ந்துள்ளது. எச்.எம்.எஸ்.ஐ. நிறுவனத்தின் ஸ்கூட்டர்கள் விற்பனை, 19.54 சதவீதம் அதிகரித்து, 89 ஆயிரத்து 869 ஆகவும், டி.வி.எஸ் மோட்டார் கம்பெனியின் ஸ்கூட்டர்கள் விற்பனை, 20.47 சதவீதம் அதிகரித்து, 46 ஆயிரத்து 324 ஆகவும் உயர்ந்துள்ளது. ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின் ஸ்கூட்டர்கள் விற்பனை, 36.29 சதவீதம் உயர்ந்து, 33 ஆயிரத்து 766 ஆக வளர்ச்சி கண்டுள்ளது. ஒட்டு மொத்த வாகனங்கள் விற்பனை, சென்ற ஜூலை மாதத்தில், 8.9 சதவீதம் உயர்ந்து, 13 லட்சத்து 48 ஆயிரத்து 753 ஆக அதிகரித்துள்ளது. இது, கடந்தாண்டு ஜூலை மாதத்தில், 12 லட்சத்து 37 ஆயிரத்து 521 ஆக இருந்தது. ஏப்ரல்-ஜூலை காலத்தில் உற்பத்தி, விற்பனை அதிகரிப்பு சென்ற ஜூலை மாதத்தில், கார் விற்பனை சரிவடைந்துள்ளது என்றாலும், நடப்பாண்டு ஏப்ரல் முதல் ஜூலை வரையிலான நான்கு மாத காலத்தில், கார்கள், வர்த்தக வாகனங்கள், மூன்று மற்றும் இரு சக்கர வாகனங்கள் உற்பத்தி, விற்பனை, மற்றும் ஏற்றுமதி ஆகியவை சிறப்பான அளவில் உயர்ந்துள்ளது என 'சியாம்' அமைப்பின் புள்ளி விவரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நடப்பு நிதியாண்டின், ஏப்ரல்-ஜூலை மாத காலத்தில், நாட்டின் ஒட்டு மொத்த வாகனங்கள் உற்பத்தி, கடந்த நிதியாண்டின் இதே காலத்துடன் ஒப்பிடும் போது, 16.78 சதவீதம் அதிகரித்து, 55 லட்சத்து 79 ஆயிரத்து 948 ஆக அதிகரித்துள்ளது. இதே காலத்தில், ஒட்டு மொத்த வாகனங்கள் விற்பனை, 13.55 சதவீதம் வளர்ச்சி கண்டு, 47 லட்சத்து 74 ஆயிரத்து 331 என்ற எண்ணிக்கையிலிருந்து, 54 லட்சத்து 21 ஆயிரத்து 89 ஆக உயர்ந்துள்ளது. ஏற்றுமதியும், 29.69 சதவீதம் உயர்ந்து, 7 லட்சத்து 81 ஆயிரத்து 381 என்ற எண்ணிக்கையிலிருந்து, 10 லட்சத்து 13 ஆயிரத்து 358 ஆக அதிகரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)