அன்னியச் செலாவணி கையிருப்புரூ.14.25 லட்சம் கோடிஅன்னியச் செலாவணி கையிருப்புரூ.14.25 லட்சம் கோடி ... விரைவில் மொபைல்போன் மூலம் மற்ற வங்கிகளுக்கு பண பரிவர்த்தனை வசதி விரைவில் மொபைல்போன் மூலம் மற்ற வங்கிகளுக்கு பண பரிவர்த்தனை வசதி ...
தங்கத்திற்கான தேவை அதிகரிப்பு:முதலீடு செய்ய முத்தான மூன்று வழிகள்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

21 ஆக
2011
03:41

மும்பை:தங்கத்தின் விலை வரலாறு காணாத அளவிற்கு உயர்ந்து வருகிறது.இதனால், ”ப காரியங்கள் போன்ற அத்தியாவசிய தேவைக்காக தங்க நகைகளை வாங்கும் சிறிய மற்றும் நடுத்தர மக்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆனால், முதலீடு என்ற வகையில் பார்த்தால், தங்கம் மிகச் சிறந்த வருவாய் தரக் கூடியதாக தற்போது உருவெடுத்துள்ளது. அமெரிக்க, ஐரோப்பிய நாடுகளில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி, கச்சா எண்ணெய் விலை வீழ்ச்சி உள்ளிட்ட காரணங்களால், முதலீட்டாளர்களின் பார்வை தங்கத்தின் பக்கம் திரும்பியுள்ளது. அவர்கள், பங்குச் சந்தையில் போட்டிருந்த முதலீட்டை திரும்பப் பெற்று, தங்கத்தில் முதலீடு செய்து வருகின்றனர். இதனால் தங்கத்தின் விலை இதுவரை இல்லாத அளவிற்கு உயர்ந்துள்ளது. வெள்ளிக்கிழமை நிலவரப்படி சர்வதேச முன்பேர சந்தையில், ஒரு அவுன்ஸ் தங்கம் (28.34 கிராம்) 1,829 டாலராக உயர்ந்துள்ளது. இத்தகைய ‹ழலில், தங்க நகைகள் நீங்கலாக, வேறு எந்தெந்த வழிகளில் தங்கத்தில் முதலீடு செய்யலாம் என்பதை இக்கட்டுரை விளக்குகிறது. 'கோல்டு ஈ.டி.எப்' (கோல்டு எக்ஸ்சேஞ்ச் பண்டு): பரஸ்பர நிதி நிறுவனங்கள் 'கோல்டு ஈ.டி.எப்' திட்டத்தை அறிமுகப்படுத்தி நிர்வகித்து வருகின்றன. பங்குகளை வாங்கி 'டீமேட்' கணக்கில் வைத்திருப்பது போல், இத்திட்டத்தில் யூனிட்டுகளாக தங்கத்தை 'டீமேட்' கணக்கில் சேமித்து வரலாம்.ஒரு யூனிட் என்பது ஒரு கிராம் தங்கத்திற்கு சமம். ஒரு சில பரஸ்பர நிதி நிறுவனங்கள், அவற்றின் 'கோல்டு ஈ.டி.எப்' திட்டங்களில், ஒரு யூனிட்டிற்கு, அரை கிராம் தங்கம் என நிர்ணயித்துள்ளன. அதாவது, அரை கிராம் தங்கத்தின் விலைக்கு ஒரு யூனிட் வாங்கலாம். இதனால், மிகக் குறைந்த முதலீட்டில் யூனிட்டுகளை வாங்க முடியும். பரஸ்பர நிதி திட்டங்களில் யூனிட்டுகளை விற்பனை செய்வது போன்று, 'கோல்டு ஈ.டி.எப்' திட்டங்களிலும், யூனிட்டுகளை வாங்குவதும், விற்பதும் சுலபம். இத்திட்டங்களின் நிகர சொத்து மதிப்பை நிறுவனங்கள் வெளியிட்டு வரும். 99.9 சதவீத சுத்த தங்கம் என்பதால், தரத்தை பற்றி கவலைப்பட வேண்டியதில்லை. மேலும், இது, ஆவண வடிவிலான முதலீடு என்பதால், பாதுகாப்பு குறித்தும் அச்சப்படத் தேவையில்லை. சிறுக சிறுக முதலீடு செய்து யூனிட் டுகளை சேமித்து வரலாம்.நகைகளை வாங்கி, மூன்றாண்டுகளுக்குள் விற்றால் மூலதன ஆதாய வரி செலுத்த வேண்டும். இது, 'கோல்டு ஈ.டி.எப்' திட்ட முதலீட்டிற்கு ஓராண்டு என்ற அளவில் குறைவாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 'ஈ கோல்டு' (மின்னணு ஆவணத்தங்கம்): நேஷனல் ஸ்பாட் எக்ஸ்சேஞ் (என்.எஸ்.ஈ.எல்) என்ற முன்பேர வர்த்தக சந்தையில் 'ஈ கோல்டு' எனப்படும் மின்னணு ஆவண தங்கத்தை வாங்கலாம். என்.எஸ்.ஈ.எல்-ல் பதிவு பெற்ற நிறுவனங்கள் வாயிலாக, தங்கம் மட்டுமின்றி வெள்ளி, தாமிரம் உள்ளிட்டவற்றுக்கான 'ஈ சில்வர்', 'ஈ காப்பர்' போன்ற திட்டங்களிலும் முதலீடு செய்யலாம். இந்த வகை முதலீட்டிற்கு என தனிப்பட்ட 'டீமேட்' கணக்கு அவசியம். ஒரு 'ஈ கோல்டு' யூனிட், ஒரு கிராம் தங்கத்திற்கு நிகராகும். முன்பேர சந்தையில், காலை 10 மணி முதல் இரவு 11 மணி வரையில் மின்னணு ஆவண தங்கத்தை வாங்கலாம் அல்லது விற்கலாம். ரொக்கமாகவோ அல்லது என்.எஸ்.ஈ.எல் -ன் அங்கீகரிக்கப்பட்ட மையங்களில் 99.9 தரத்திலான தங்கமாகவோ வாங்கிக் கொள்ளலாம்.நாடு முழுவதும் ஒரே விலையில் தங்கத்தை வாங்கவும், விரும்பும் போது லாபகரமாக விற்கவும் இத்திட்டம் வகை செய்கிறது. கோல்டு பண்ட்ஸ் (தங்க நிதி திட்டம்):இதுவும் பரஸ்பர நிதி திட்டம் போன்றது தான். பரஸ்பர நிதி நிறுவனங்கள் நிர்வகிக்கும் இத்திட்டத்தில் முதலீடு செய்வதற்கு 'டீமேட்' கணக்கு தொடங்க வேண்டிய அவசியமில்லை. தங்கத்தின் சந்தை விலைக்கு ஏற்ப, இத்திட்டத்தின் நிகர சொத்து மதிப்பு கணிக்கப்படும். ஆவண வடிவிலான இந்த தங்கம், பாது காப்பிற்கு அச்”றுத்தல் இல்லாதது. எனினும், இத்திட்டத்தின் கீழ் நிறுவனங்கள் நிர்ணயிக்கும் நிர்வாக செலவுகளை ஒப்பிட்டு முதலீடு செய்வது சிறந்தது. இதே வகை முதலீட்டில் மற்றொரு திட்டமும் உள்ளது. 'பண்ட்ஸ் ஆப் பண்ட்ஸ்' என்ற இத்திட்டத்தின் கீழ் திரட்டப்படும் முதலீடு, இதர பரஸ்பர நிதி நிறுவனங்களின் 'கோல்டு ஈ.டி.எப்' திட்டங்களில் முதலீடு செய்யப்படும். இத்திட்டங்களின் நிகர சொத்து மதிப்பிற்கேற்ப, 'பண்ட்ஸ் ஆப் பண்ட்ஸ்' திட்டத்தின் நிகர சொத்து மதிப்பிடப்படும். இதையொட்டியே யூனிட்டுகளின் மதிப்பு இருக்கும். இத்தகைய திட்டங்களில் முதலீடு செய்வதற்கு முன்பு, ஒரு சில அம்சங்களை கவனத்தில் கொள்ள வேண்டும். பங்கு முதலீடு போல், இத்திட்டங்களில் டிவிடெண்டு அல்லது இலவச யூனிட்டுகள் வழங்கப்பட மாட்டாது.நிறுவனங்களின் நிதியாதாரத்தை மதிப்பிட்டு, வருங்கால வளர்ச்சியின் அடிப்படையில் பங்குகளில் முதலீடு செய்வது போல் இதில் செய்ய முடியாது. தங்கத்தின் உற்பத்தி, தேவை, சந்தை நிலவரம் ஆகியவற்றை வைத்தே இதன் விலையில் ஏற்ற,இறக்கம் இருக்கும். தங்க நாணயங்களில் முதலீடு செய்வதில் ஆர்வம்:தங்க நகைகளை வாங்குவதில் இந்தியர்களுக்கு இருந்து வந்த ஆர்வம், தற்போது தங்க கட்டிகள், தங்க நாணயங்களின் பக்கம் திரும்பியுள்ளது.நடப்பு காலண்டர் ஆண்டில், ஜூன் வரையிலான இரண்டாவது காலாண்டில், இந்தியர்கள் வாங்கிய மொத்த தங்கத்தில், ஆபரணங்களின் பங்களிப்பு 56 சதவீதமாக உள்ளது. தங்க கட்டிகள், தங்க நகைகள், பரஸ்பர நிதி நிறுவனங்களின் தங்க ஈ.டி.எப்., திட்டங்களில் மேற்கொள்ளப்பட்ட முதலீடு 44சதவீத பங்களிப்பை கொண்டுள்ளது. சென்ற 2010ம் ஆண்டு, ஜூன் வரையிலான இரண்டாவது காலாண்டில், தங்கத்தில் மேற்கொள்ளப்பட்ட ஒட்டு மொத்த முதலீடு, 34 சதவீதம் என்ற அளவிற்கு இருந்தது. மேலும், நடப்பாண்டு இதே காலத்தில், தங்கத்தில் செய்யப்பட்ட முதலீடு 12 சதவீதம் வளர்ச்சி கண்டுள்ளது.தங்க கட்டிகள், நாணயங்கள், ஈ.டி.எப்., திட்டங்களில் செய்யப்பட்ட முதலீடு மதிப்பின் அடிப்படையில், முந்தய ஆண்டு இதே காலத்தை விட 119 சதவீதம் அதிகரித்துள்ளது. இதே காலத்தில் தங்க ஆபரணங்களில் மேற்கொள்ளப்பட்ட முதலீடு, 44 சதவீதம் வளர்ச்சி கண்டுள்ளது.சென்ற 2010ம் ஆண்டு, நிலவரப்படி இந்திய இல்லங்களில், 18 ஆயிரம் டன் தங்க ஆபரணங்கள் உள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)