பதிவு செய்த நாள்
25 ஆக2011
10:56
புதுடில்லி : வெங்காய ஏற்றுமதிக்கான விலையை டன் ஒன்றிற்கு 25 டாலர் முதல் 300 டாலர் வரை மத்திய அரசு உயர்த்தி உள்ளது. இந்த மாதத்தில் 2வது முறையாக உயர்த்தப்பட்டுள்ள இந்த ஏற்றுமதி விலை ஏற்றம் ஏற்றுமதியாளர்கள் மற்றும் சில்லறை வியாபாரிகளிடையே விரக்தியை ஏற்படுத்தி உள்ளது. பெங்களூரு ரோஸ் வெங்காயம் மற்றும் கிருஷ்ணாபுரம் வெங்காயம் ஆகியவற்றை தவிர பிற வெங்காய வகைகளுக்கு குறைந்தபட்ச ஏற்றுமதி விலையாக டன் ஒன்றிற்கு 300 டாலர்களாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஆகஸ்ட் 12ம் தேதியன்று குறைந்தபட்ச ஏற்றுமதி விலை 275 டாலராக உயர்த்தப்பட்டது குறிப்பிடத்தக்கது. இருப்பினும் பெங்களூரு ரோஸ் வெங்காயம் மற்றும் கிருஷ்ணாபுரம் வெங்காயம் ஆகியவற்றிற்கு வழக்கமான 400 டாலர்களே ஏற்றுமதி விலையாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|