பதிவு செய்த நாள்
14 அக்2011
09:26

சென்னை : "விரைவில், புதிய 20 ரூபாய் நோட்டுக்கள் புழக்கத்தில் விடப்படும்' என, சென்னை ரிசர்வ் வங்கியின் பொது மேலாளர் போரா தெரிவித்துள்ளார். இது குறித்து, அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: ரிசர்வ் வங்கி,"எப்' என்ற ஆங்கில எழுத்து உள்பொதிந்து அச்சடிக்கப்பட்ட, புதிய 20 ரூபாய் நோட்டுக்களை, விரைவில் வெளியிட உள்ளது. ரிசர்வ் வங்கி ஆளுநர் சுப்பாராவ் கையெழுத்திட்ட, மகாத்மா காந்தி வரிசை 2005 நோட்டுக்களின், இரண்டு இடங்களில் உள்ள எண்கள் வரிசையில்,"எப்' எழுத்து உள்பொதிந்து அச்சிடப்பட்டிருக்கும். இதைத் தவிர, இந்த 20 ரூபாய் நோட்டுக்களில், எவ்வித மாற்றமும் இருக்காது. இதற்கு முன், ரிசர்வ் வங்கியால் வெளியிடப்பட்டுள்ள 20 ரூபாய் நோட்டுக்களும், சட்டப்படி செல்லுபடியாகும். இவ்வாறு, ரிசர்வ் வங்கி பொது மேலாளர் போரா கூறியுள்ளார்.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|