நடப்பு 2011ம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் நாட்டின் ஏற்றுமதி ரூ.91,200 கோடியாக குறைந்ததுநடப்பு 2011ம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் நாட்டின் ஏற்றுமதி ரூ.91,200 கோடியாக ... ... தங்கம் விலை சவரனுக்கு ரூ.184 உயர்வு  தங்கம் விலை சவரனுக்கு ரூ.184 உயர்வு ...
ரூ.67 ஆயிரம் மாத சம்பளத்தில் மின் வாரியத்தில் வேலை
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

09 நவ
2011
10:05

சென்னை : மின் துறை இயக்குனர் பதவி பணியிடம் காலியாவதால், நேரடித் தேர்வில் அந்த இடம் நிரப்பப்பட உள்ளது. இதில் சேர விரும்புவோர், டிச., 12 க்குள் விண்ணப்பிக்க வேண்டும். இதுகுறித்து, தமிழக மின்சார ஒழுங்குமுறை ஆணையம் வெளியிட்ட அறிவிப்பு: தமிழக மின் வாரிய மின் கட்டணப் பிரிவு இயக்குனர் பதவிக்கு, நேரடித் தேர்வு மூலம் ஆள் சேர்க்கப்படும். பொருளாதாரவியல் அல்லது வணிகவியலில் முதுகலைப் பட்டம், எம்.பி.ஏ., நிதி மேலாண்மை, சார்ட்டட் அக்கவுன்டன்ட், காஸ்ட் அக்கவுன்டன்ட் ஆகிய இவற்றில், குறைந்தது ஏதாவது ஒன்றில் பட்டம் பெற்றிருக்க வேண்டும். நிதி, கணக்கியல், மின் துறையில் கட்டண மேலாண்மை, மின் துறை நிர்வாக அளவில், ஏதாவது ஒரு பிரிவில் ஏழு ஆண்டுகள் அனுபவம் பெற்றிருக்க வேண்டும். இந்தத் தகுதி பெற்றவர்கள், அடுத்த மாதம் 12ம் தேதிக்குள், எழும்பூரிலுள்ள தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தில் விண்ணப்பிக்கலாம். கிரேடு-1 பதவியில் தேர்ந்தெடுக்கப்படுபவருக்கு, 37 ஆயிரத்து 400 முதல் 67 ஆயிரம் வரையில், 10 ஆயிரம் ரூபாய் கிரேடு தொகை இணைத்து வழங்கப்படும். கிரேடு-2 ல் தேர்வாகும் நபருக்கு, 37 ஆயிரத்து 400 முதல், 67 ஆயிரம் வரையிலும், 8,900 ரூபாய் வரை கிரேடு தொகையும் இணைத்துத் தரப்படும். கிரேடு-1ல் தகுதியுள்ளவர் விண்ணப்பிக்காவிட்டால், கிரேடு-2ல் உள்ளவர் தேர்வாவார். விண்ணப்பிப்பவருக்கு, குறைந்தது 40 முதல், 50 வயதுக்குள் இருக்க வேண்டும். தமிழக அரசின் வேறு துறைகள், பொதுத் துறைகள் ஆகியவற்றில் பணிபுரிபவர்களும், துறை மாறுதல் உத்தரவில், வர முடியும். அதற்கு, சம்பந்தப்பட்ட துறையிடமிருந்து, தடையில்லாச் சான்றிதழ் வாங்கி வர வேண்டும். இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது. தமிழக மின் வாரியத்தில், கட்டணப் பிரிவு நிதிக் கட்டுப்பாட்டாளராக பாலதண்டாயுதபாணி பணிபுரிகிறார். இவர், அடுத்த மாதம் ஓய்வு பெறுவதால், புதிய மின் கட்டண இயக்குனர் நியமிக்கப்படுகிறார்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)