பதிவு செய்த நாள்
11 நவ2011
12:23

புதுடில்லி : அக்டோபர் 29ம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் நாட்டின் உணவு பணவீக்கம் 11.81 சதவீதமாக சரிவடைந்துள்ளது. கடந்த வாரத்தில் உணவு பணவீக்கம் 12.21 சதவீதமாக இருந்தது குறிப்பிடத்தக்கது. காய்கறிகள், பருப்பு வகைகள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் விலைஉயர்வால் பணவீக்கம் குறைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் உணவு பொருட்களின் விலை 12.68 சதவீதம் வரை அதிகரித்துள்ளது. காய்கறிகளின் விலை 26.05 சதவீதமும், பருப்பு வகைகளின் விலை 13.27 சதவீதமும், பழங்களின் விலை 11.70 சதவீதமும், பால் விலை 11.79 சதவீதமும் அதிகரித்துள்ளது. இதே போன்று முட்டை, இறைச்சி, மீன் ஆகியவை 12.74 சதவீதமும், தானிய வகைகள் 4.07 சதவீதமும் அதிகரித்துள்ளன. அதேசமயம் வெங்காயத்தின் விலை 19.31 சதவீதமும், கோதுமை 1.77 சதவீதமும் குறைந்துள்ளன.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|