பதிவு செய்த நாள்
16 நவ2011
09:39

தமிழகத்தில், உணவுப் பொருட்களின் விலையைக் கட்டுப்படுத்த, குழு ஒன்றை அமைக்க, அரசு திட்டமிட்டுள்ளது. இதையடுத்து, ரேஷன் கடைகளில் காய்கறி விற்பனை செய்யப்பட உள்ளது.தமிழகத்தில், விலைவாசி உயர்வால், பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். காய்கறிகளின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. மத்திய அரசு, அடிக்கடி உயர்த்தும் பெட்ரோல், டீசல் விலை உயர்வால், நடுத்தர மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழக அரசு, காய்கறி மற்றும் உணவுப் பொருட்களின் விலையைக் கட்டுப்படுத்துவதற்கு, குழு ஒன்றை அமைத்துள்ளது.
இந்த குழு, ஒவ்வொரு மாவட்டத்திலும், கலெக்டர் தலைமையில் செயல்படும். மாவட்ட வழங்கல் அலுவலர் மற்றும் தாசில்தார்கள், குழுவில் இடம் பெற உள்ளனர்.
உணவுப் பொருட்களின் விலையைக் கட்டுப்படுத்த, காய்கறிகளை ரேஷன் கடைகளில் விற்பனை செய்வது; விவசாயிகள் ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்குக் காய்கறிகளை ஏற்றிச் செல்ல, அரசு சார்பில் வாகனங்கள் ஏற்பாடு செய்வது; ரேஷன் கடைகளில், அனைத்துப் பொருட்களும் கிடைப்பதற்கு ஏற்பாடு செய்வது உட்பட, பல திட்டங்கள் குழுவால் நிறைவேற்றப்பட உள்ளன.இதற்கான ஆயத்தப் பணிகளில், அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.ரேஷன் கடைகளில், கூடுதல் பணியாளர்கள் நியமிப்பது குறித்தும், ஆலோசிக்கப்பட்டு வருகிறது.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|