பதிவு செய்த நாள்
22 நவ2011
10:31
புதுடில்லி : டிவி உள்ளிட்ட எலெக்ட்ரானிக்ஸ் உபகரணங்கள் தயாரிப்பு மற்றும் வர்த்தகத்தில் முன்னணியில் உள்ள எல்ஜி எலெக்ட்ரானிக்ஸ் நிறுவனம், தொழில்நுட்ப அறிவுசார்ந்த மக்களின் தேவையை பூர்த்தி செய்யும் வண்ணம் புதிதாக டைம் மெஷின் டிவியை அறிமுகப்படுத்தியுள்ளது. 80 ஜிபி ஹார்ட் டிஸ்க்கை தன்னகத்தே கொண்டவாறு வடிவமைக்கப்பட்டுள்ள இந்த டிவியின் மூலம், டிவியில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகளை பதிவு செய்வதோடு மட்டுமல்லாமல், எக்ஸ்டெர்னல் உபகரணங்களான சிடி, பென்டிரைவ் உள்ளிட்டவைகளில் உள்ள நிகழ்ச்சிகளையும் இதில் ரெக்கார்ட் செய்ய முடியும். டைம் மெஷின் சீரீசை அடிப்படையாகக் கொண்டு இந்த டிவி வடிவமைக்கப்பட்டுள்ளது. வளர்ச்சியடைந்த நாடுகளில், பெருவெற்றி கண்ட இந்த தொழில்நுட்பம், தற்போது, இந்திய மக்களின் தேவையை பூர்த்தி செய்யும் விதத்தில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த டிவியில் உள்ள ஹை-டெபனீசன் டிஜிட்டல் ரெக்கார்டர் தொழில்நுட்பத்தின் மூலம், நமக்கு பிடித்தமான நிகழ்ச்சிகளை ரெக்கார்ட் செய்து, நமக்கு விருப்பமான நேரத்தில் அதை கண்டுகளிக்கலாம். அதேபோல், ஒரு நேரடி நிகழ்ச்சியை கண்டுகளித்துக் கொண்டிருக்கும் போதே, மற்றொரு நிகழ்ச்சியையும் இதில் ரெக்கார்ட் செய்ய முடியும் என்பது இதன் தனிச்சிறப்பு. நமக்கு விருப்பமான நிகழ்ச்சிகளை, விருப்பமான நேரத்தில் விளம்பரங்கள் இன்றி, இந்த டிவியின் மூலம் கண்டுகளிக்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது. டைம் மெஷின் டிவிக்கள் எல்சிடி பிரிவில், 37 மற்றும் 42 இஞ்ச் அளவுகளிலும், பிளாஸ்மா டிவிக்கள் 42 மற்றும் 50 இஞ்ச் அளவுகளிலும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்திய சந்தையில், இந்த டிவிக்களின் விலை ரூ. 1 லட்சம் முதல் 2,50,000 என்ற அளவில் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் சந்தையில் புதுசு செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|