பதிவு செய்த நாள்
24 நவ2011
02:05
புதுடில்லி:டாட்டா சன்ஸ், 8,000 கோடி டாலர் மதிப்பிலான, டாட்டா குழுமத்தின் தாய் நிறுவனமாகும். இந் நிறுவனத்தின் துணைத் தலைவராக, சபூர்ஜி பலோன்ஜி குழுமத்தின் நிர்வாக இயக்குனரான, சைரஸ் பி.மிஸ்த்ரி,43, நியமிக்கப்பட்டுள்ளார்
டாட்டா சன்ஸ் நிறுவனத்தின் தலைவராக உள்ள ரத்தன் டாட்டா, அடுத்தாண்டு டிசம்பரில் ஓய்வு பெற உள்ளார். இதையொட்டி, இந்நிறுவனத்தின் நிர்வாகக் குழு கூட்டம், நேற்று கூடியது.இக்கூட்டத்தில் மிஸ்த்ரி யை துணைத் தலைவராக நியமிக்க ஒப்புதல் வழங்கப்பட்டது. இவர், ரத்தன் டாட்டா உடன் இணைந்து, பணியாற்றுவார். அடுத் தாண்டு, டிசம்பரில், ரத்தன் டாட்டாவின் ஓய்வுக்கு பிறகு, டாட்டா சன்ஸ் நிறுவனத்தின் தலைவராக மிஸ்த்ரி பதவி யேற்பார்.மிஸ்த்ரி, டாட்டா சன்ஸ் நிறுவனத்தில் 2006ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் முதல் இயக்குனராக செயல்பட்டு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|