தங்கம் விலை சவரனுக்கு ரூ.328 குறைந்ததுதங்கம் விலை சவரனுக்கு ரூ.328 குறைந்தது ... கரடியின் பிடியில்  சிக்கியது இன்றைய பங்குச்சந்தை கரடியின் பிடியில் சிக்கியது இன்றைய பங்குச்சந்தை ...
மும்பையில் உள்ள சச்சின் வீடு ரூ.100 கோடிக்கு இன்சூரன்ஸ்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

29 டிச
2011
14:41

மும்பை: உலகின் தலைசிறந்த பேட்ஸ்மேன் சச்சின் . விளையாட்டு மட்டுமின்றி விளம்பரங்கள் மூலமும் கோடிக்கணக்கில் பணம் சம்பாதித்து வருகிறார். சச்சின் கடந்த செப்டம்பர் மாதம் மும்பை பாந்த்ரா மேற்கு பகுதியில் உள்ள பெரிகிராஸ் ரோட்டில் உள்ள புதிதாக கட்டப்பட்ட வீட்டில் குடியேறினார். 5 மாடி கொண்ட இந்த வீட்டின் மதிப்பு ரூ.80 கோடி ஆகும்.நவீன வசதிகளுடன் இந்த வீடு கட்டப்பட்டுள்ளது. நட்சத்திர ஓட்டலுக்கு இணையாக கட்டப்பட்ட இந்த வீட்டின் பேஸ்மண்டில் 40 முதல் 50 கார்களை ஒரே இடத்தில் நிறுத்தும் வசதி உள்ளது. சச்சின் இந்த வீட்டை ரூ.100 கோடிக்கு இன்சூரன்ஸ் செய்து உள்ளார். இரண்டு விதமாக இன்சூரன்ஸ் செய்யப்பட்டுள்ளது. முதல் இன்சூரன்ஸ் பாலிசி ரூ.75 கோடிக்கும், கூடுதலாக ரூ.25 கோடிக்கு இன்னொரு இன்சூரன்ஸ் பாலிசியும் எடுக்கப்பட்டுள்ளது. முதல் இன்சூரன்ஸ் பாலிசி தீ விபத்து, தீவிரவாத செயல்கள், இயற்கை பேரழிவு (நில நடுக்கம்) குண்டு வெடிப்பு ஆகியவற்றை உள்ளடக்கியது. இதற்காக சச்சின் ஆண்டு தோறும் ரூ.40 லட்சம் முதல் ரூ.50 லட்சம் தொகை செலுத்தலாம் என்று தெரிகிறது. தொழில் அதிபர் அனில் அம்பானியின் வீடு ரூ.150 கோடிக்கும், நடிகர் ஷாருக்கானின் வீடு ரூ.110 கோடிக்கும், அமிதாப்பச்சனின் வீடு ரூ.100 கோடிக்கும் இன்சூரன்ஸ் செய்யப்பட்டுள்ளது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)