பதிவு செய்த நாள்
04 ஜன2012
13:40

மும்பை: செல்போன், சில்லறை காய்கறி கடைகள், பெட்ரோல் நிறுவனங்கள், ஜவுளித்துறை, எலெக்ட்ரானிக்ஸ்... என்று பல்வேறு தொழில் புரியும் ரிலையன்ஸ் நிறுவன அதிபர் முகேஷ்அம்பானி. உலக பணக்காரர்கள் பட்டியலில் இடம் பெற்றுள்ள இவர் அனைத்து தொழில் துறைகளிலும் முன்னணி இடத்தில் உள்ளார். தற்போது இவர் டி.வி. மற்றும் பொழுதுபோக்கு தொழிலிலும் காலடி எடுத்து வைத்துள்ளார். இதற்காக இவர் நெட் வொர்க் 18 என்ற குழுமத்தை உருவாக்கி உள்ளார். முதல் கட்டமாக நெட்வொர்க் 18 நிறுவனம் தெலுங்கின் முன்னணி நாளிதழான ஈ நாடு நிறுவனத்திற்கு சொந்தமான 12 டி.வி. சேனல்களை ரூ. 2100 கோடிக்கு வாங்கி உள்ளது. நெட்வொர்க் 18 முதலீடு செய்துள்ள 12 ஈ டி.வி. சேனல்கள் விவரம் வருமாறு:- ஈ டி.வி. உத்தரபிரதேஷ், ஈ டி.வி. மத்திய பிரதேஷ், ஈ டி.வி. ராஜஸ்தான், ஈ டி.வி. பீகார், ஈ டி.வி உருது, ஈ டி.வி. மராத்தி, ஈ டி.வி. கன்னடா, ஈ டி.வி. பெங்கலா, ஈ டி.வி. குஜராத்தி, ஈ டி.வி. ஒரியா, ஈ டி.வி. தெலுங்கு, ஈ டி.வி. தெலுங்கு நியூஸ். இவற்றில் ஈ டி.வி. மராத்தி, ஈ டி.வி. கன்னடா, ஈ டி.வி. பெங்கலா, ஈ டி.வி. குஜராத்தி, ஈ டி.வி. ஒரியா ஆகியவற்றில் நெட்வொர்க் 18 நிறுவனமானது. 100 சதவீத முதலீடும், ஈ டி.வி. தெலுங்கு, ஈ டி.வி. தெலுங்கு நியூஸ் ஆகிய வற்றில் 24.5 சதவீத முதலீடும் செய்துள்ளது. நெட்வொர்க் 18 குழுமத்தில் சி.என்.பி.சி. டி.வி. 18, சி.என்.என்.-ஐ.பி.என்., சி.என்.பி.சி. அவாஸ், ஐ.பி.என். 7 ஆகிய சேனல்கள் இடம் பெற்றுள்ளன. ஸ்டார், ஜீ டி.வி. நிறுவனங்கள் தமிழில் தலா ஒரு சேனல் உள்பட பல்வேறு மொழிகளில் சேனல்கள் நடத்தி வருகின்றன. தற்போது முகேஷ் அம்பானி ஒரே சமயத்தில் ஈ டி.விக்கு சொந்தமான 12 மாநில மொழி சேனல்களை வாங்கி இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. நெட்வொர்க் 18 நிறுவன தலைமை செயல் அதிகாரி ஹரீஷ் சாவ்லா கூறும்போது, மாநில மொழி டி.வி. சேனல்கள்தான் எதிர் காலத்தில் நல்ல வளர்ச்சி பெறும். இதனால்தான் எங்கள் நிறுவனம் அவற்றில் முழு கவனம் செலுத்தி வருகிறது என்றார்.
மேலும் ஐ.டி செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|