பதிவு செய்த நாள்
13 ஜன2012
09:27

மும்பை: இந்திய பங்குச்சந்தை வார வர்த்தகத்தின் இறுதி நாளான இன்று ஏற்றத்துடன் தொடங்கியது. இன்று காலை வர்த்தக நேரம் தொடங்கிய நேரத்தில் (9.08 மணியளவில்), மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 107.06 புள்ளிகள் அதிகரித்து 16144.57புள்ளிகளோடு காணப் பட்டது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிப்டி 30.70 புள்ளிகள் அதிகரித்து 4861.95 புள்ளிகளோடு காணப் பட்டது. நாட்டின் பங்கு வியாபாரம், வியாழக்கிழமையன்று அதிக ஏற்ற இறக்கத்துடன் காணப்பட்டது. உலகின் ஒரு சில பங்குச் சந்தைகளில், வர்த்தகம் மந்தமாக இருந்தது. இந்நிலையில், லாப நோக்கம் கருதி, பரஸ்பர நிதி நிறுவனங்களும், சில்லரை முதலீட்டாளர்களும் பங்குகளை விற்பனை செய்ததால், குறிப்பிட்ட சில துறைகளைச் சேர்ந்த நிறுவனப் பங்குகளின் விலை சரிவடைந்து போனது.நேற்று நடைபெற்ற பங்கு வியாபாரத்தில்தகவல் தொழில்நுட்பம், எண்ணெய், எரிவாயு, பொறியியல் ஆகிய துறைகளைச் நிறுவனப் பங்குகளும் குறைந்த விலைக்கு கைமாறின. அதேசமயம், மின்சாரம், வங்கி, உலோகம், மோட்டார் வாகனம் ஆகிய துறைகளைச் சேர்ந்த நிறுவனப் பங்குகளுக்கு தேவை இருந்தது.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|