பதிவு செய்த நாள்
02 பிப்2012
01:44

புதுடில்லி:நாட்டின் ஏற்றுமதி, சென்ற டிசம்பர் மாதத்தில், 2,500 கோடி டாலராக (1 லட்சத்து 25 ஆயிரம் கோடி ரூபாய்) அதிகரித்துள்ளது. இது, கடந்த நிதியாண்டின் இதே மாதத்தில் மேற்கொள்ளப்பட்ட ஏற்றுமதியை விட, 6.7 சதவீதம் அதிகமாகும்.இதே காலத்தில், இறக்குமதி, 19.8 சதவீதம் உயர்ந்து, 3,780 கோடி டாலராக (1 லட்சத்து 89 ஆயிரம் கோடி ரூபாய்) அதிகரித்துள்ளது. ஏற்றுமதியை விட, இறக்குமதி அதிகரித்துள்ளதால், வர்த்தக பற்றாக்குறை, 1,280 கோடி டாலராக (64 ஆயிரம் கோடி ரூபாய்) உயர்ந்துள்ளது.
நடப்பு நிதியாண்டின் ஏப்ரல் முதல் டிசம்பர் வரையிலான ஒன்பது மாத காலத்தில், ஏற்றுமதி, 21 ஆயிரத்து 760 கோடி டாலராக (10 லட்சத்து 88 ஆயிரம் கோடி ரூபாய்) அதிகரித்துள்ளது. இது, கடந்த நிதியாண்டின் இதே காலத்தில், மேற்கொள்ளப்பட்ட ஏற்றுமதியை விட, 25.8 சதவீதம் அதிகமாகும்.மதிப்பீட்டு காலத்தில், கச்சா எண்ணெய் இறக்குமதி, 1,030 கோடி டாலராக (51 ஆயிரத்து 500 கோடி ரூபாய்) அதிகரித்துள்ளது. சர்வதேச அளவில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியால், இந்தியாவின் முக்கிய வர்த்தக மையமாக விளங்கும் ஐரோப்பிய நாடுகள், பொருளாதார நெருக்கடியால் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளன. இதனால், நடப்பு நிதியாண்டில், நாட்டின் ஏற்றுமதி பாதிக்கப்பட்டுள்ளது.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|