பதிவு செய்த நாள்
08 பிப்2012
10:52

இந்தியாவில் உள்ள மிகப்பெரிய தொலைத்தொடர்பு நிறுவனங்களில் ஒன்றான பார்தி ஏர்டெல் நிறுவனத்தின் நிகரலாபம் 22 சதவீதம் சரிவடைந்துள்ளது.
இந்தியா உள்ளிட்ட 19 நாடுகளில் கிட்டத்தட்ட 243 மில்லியன் வாடிக்கையாளர்களை கொண்ட மிகப்பெரிய தொலைத்தொடர்பு நிறுவனம் பார்தி ஏர்டெல். இந்த நிறுவனம் 2011 அக்டோபர்-டிசம்பர் 31ம் தேதி முடிய 3வது காலாண்டு நிதிநிலை அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதில் அந்த நிறுவனத்தின் நிகர லாபம் 22 சதவீதம் சரிவடைந்துள்ளது. அதாவது மதிப்பீட்டில் ரூ.1,011கோடி சரிவடைந்து இருக்கிறது. 3ஜி நெட்வொர்க்கில் ஏற்பட்ட அதிப்படியான செலவு காரணமாக இந்த சரிவு ஏற்பட்டுள்ளதாக அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது. அதேசமயம் நிறுவனத்தின் மொத்த லாபம் 17 சதவீதம் உயர்ந்து ரூ.18 ஆயிரத்து 477 கோடியயை எட்டியுள்ளதாகவும் அதன் நிதிநிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே நிகரலாபம் சரிவு காரணமாக இன்றைய பங்குசந்தையில் ஏர்டெல் நிறுவனத்தின் பங்குவிலை 3.15 சதவீதம் சரிந்து ரூ.367-ஆக இருந்தது குறிப்பிடத்தக்கது.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|