பதிவு செய்த நாள்
14 பிப்2012
15:59

டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் நானோ கார், பல்வேறு சிறப்பு அம்சங்களை கொண்டது. இதன் விற்பனையை அதிகரிக்க செய்ய, டாடா மோட்டார்ஸ் நிறுவனம் அவ்வப்போது தள்ளுபடி சலுகைகளை அறிவித்து வருகிறது.இந்த சூழ்நிலையில், 2012ம் ஆண்டுக்கான மேம்படுத்தப்பட்ட நானோ கார் அறிமுகப்படுத்தப்பட்டது. இது மூன்று வேரியன்ட்களில் வருகிறது. எனினும், விலையில் எந்த மாற்றமும் இல்லை. காரின் வேகத்தை அதிகப்படுத்த இன்ஜின் மற்றும் கியர் பகுதியில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு 25.4 கி.மீ., மைலேஜ் தருகிறது என டாடா மோட்டார்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது. இந்த காருக்கு தற்போது புதிய சலுகையை அறிவித்துள்ளது. ஏற்கனவே, இந்த காருக்கு 10,000 ரூபாய் பண தள்ளுபடி சலுகை உண்டு. இத்துடன் பழைய இரு சக்கர வாகனத்தை எக்சேஞ்ச் செய்து, இந்த காரை வாங்கினால் ரூ.20 ஆயிரத்துக்கு கூடுதல் சலுகை கிடைக்கும். பழைய காரை எக்சேஞ்ச் செய்து, நானோ காரை வாங்கினால் ரூ.25 ஆயிரம் கூடுதல் சலுகை அளிக்கப்படும் என்று டாடா மோட்டார்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.
மேலும் சந்தையில் புதுசு செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|