செயில் நிறுவனம் டிவிடெண்டு அறிவிப்புசெயில் நிறுவனம் டிவிடெண்டு அறிவிப்பு ... பாஸ்போர்ட் சேவை: மேலும் 3 பிரிவினருக்கு விதிமுறையில் தளர்வு பாஸ்போர்ட் சேவை: மேலும் 3 பிரிவினருக்கு விதிமுறையில் தளர்வு ...
நாட்டின் பணவீக்கம் 6.55 சதவீதமாக குறைந்தது
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

15 பிப்
2012
02:29

புதுடில்லி:நாட்டின் பொது பணவீக்கம், கடந்த 26 மாதங்களில் இல்லாத அளவிற்கு, சென்ற ஜனவரி மாதத்தில்,6.55 சதவீதமாக குறைந்துள்ளது. இது, முந்தைய டிசம்பர் மாதத்தில், 7.47 சதவீதமாக அதிகரித்து காணப்பட்டது என, மத்திய அரசு தெரிவித்துள்ளது.
கடந்த 2009ம் ஆண்டின் நவம்பர் மாதத்தில், பொது பணவீக்கம், 4.73 சதவீதம் என்றளவில் இருந்தது. அதேசமயம், 2011ம் ஆண்டு ஜனவரியில், 9.47 சதவீதமாகவும் அதிகரித்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.சென்ற ஜனவரியில் உணவுப் பொருள் பணவீக்கம், மைனஸ் 0.52 சதவீதம் என்றளவில் பின்னடைவை கண்டிருந்தது. இது, டிசம்பரில், 0.74 சதவீதம் என்றளவில் இருந்தது.
மதிப்பீட்டு மாதத்தில், ஆண்டுக்கணக்கில், காய்கறிகள் விலை 43.13 சதவீதமும், கோதுமை விலை, 3.48 சதவீதமும் சரிவடைந்திருந்தது.மேலும்,உருளைக்கிழங்கு (23.15 சதவீதம்), வெங்காயம் (75.57 சதவீதம்) ஆகியவற்றின் விலையும் குறைந்திருந்தது.மொத்த விலைக் குறியீட்டு எண் கணக்கிடுவதில், உணவுப் பொருட்களின் பங்களிப்பு 14.3 சதவீதம் என்றளவிலும், தயாரிப்புத் துறையின் பங்களிப்பு, 65 சதவீதம் என்றளவிலும் உள்ளது.
சென்ற ஜனவரியில், தயாரிப்பு துறை பொருட்களுக்கான பணவீக்கம், ஆண்டுக்கணக்கில் 6.49 சதவீதம் என்றள வில் குறைந்துள்ளது.இது, டிசம்பர் மாதத்தில்,7.41 சதவீதம் என்றளவில் இருந்தது.இத்துறைக்கான பணவீக்கம் சென்ற 2011ம் ஆண்டு பிப்ரவரியி லிருந்து,6 சதவீதத்திற்கும் அதிகமாகவே இருந்து வருகிறது.தயாரிப்பு துறை யில்,உருக்கு மற்றும் இடைநிலைப் பொருட்களுக்கான பணவீக்கம், 18.46 சதவீதம் என்றளவிலும், சமையல் எண் ணெய் பணவீக்கம், 9.59 சதவீதம் என்றளவிலும் உயர்ந்துள்ளது.
மேலும், புகையிலை பொருட்களுக்கான பணவீக்கம், 9.36 சதவீதம் என்றளவிலும், அடிப்படை உலோகங்க ளுக்கான பணவீக்கம், 11.99 சதவீதம் என்றளவிலும் அதிகரித்துள்ளது.இதே மாதங்களில், முக்கிய பொருட் களுக்கான பணவீக்கம், 3.07 சதவீதம் என்றளவிலிருந்து, 2.25 சதவீதமாக குறைந்துள்ளது. உணவு சாரா பிரிவின் கீழ், நூலிழை மற்றும் எண்ணெய் வித்துக்கள் பணவீக்கம், 1.48 சதவீதம் என்றளவிலிருந்து, 0.55 சதவீதம் என்றள வில் குறைந்துள்ளது. மதிப்பீட்டு காலத்தில், எரிபொருள் மற்றும் மின்சாரத்திற்கான பணவீக்கம், 14.91 சதவீதம் என்ற அளவிலிருந்து, 14.21 சதவீதம் என்றளவில் குறைந்துள்ளது.
இதுகுறித்து மத்திய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி கூறும்போது, "உணவுப் பொருட்களின் விலை சரிவடைந்துள் ளதால், நாட்டின் பணவீக்கம் குறைந்துள்ளது. தற்போதைய சூழலில் இது போதாது. பணவீக்கம் தற்போதைய நிலையிலிருந்து மேலும் குறைய வேண்டும். நடப்பு நிதியாண்டின் இறுதியில், பணவீக்கம் 6 சதவீதமாக குறையும் என எதிர்பார்க்கிறேன்' என்றார்.பணவீக்கம் குறைந்துள்ளதால், ரிசர்வ் வங்கி, வங்கிகளுக்கான வட்டி விகிதங்களை குறைக்கக் கூடும் என ஆய்வாளர்கள் கருத்து தெரிவித்தனர்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)