தங்கம் விலை சவரனுக்கு ரூ.264 உயர்வுதங்கம் விலை சவரனுக்கு ரூ.264 உயர்வு ... தமிழகம், கேரளாவில் முட்டை விலை 284 காசாக நிர்ணயம் தமிழகம், கேரளாவில் முட்டை விலை 284 காசாக நிர்ணயம் ...
வர்த்தகம் » ஆட்டோமொபைல்
உங்கள் வாகனத்தின் விவரத்தை மொபைல் போனில் அறியலாம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

23 பிப்
2012
15:41

மதுரை: வாகனங்களின் எண், பெயர் போன்ற விவரங்களை மொபைல் போனில் அறிந்து கொள்ளும் வசதி, நேற்று முதல் அறிமுகப்படுத்தப்பட்டது. வாகனங்களின் விபத்து, திருட்டு போன்ற சம்பவங்களால், அதன் விவரங்களை தெரிந்து கொள்வதற்கு, வட்டார போக்குவரத்து அலுவலகங்களுக்குச் சென்று, காலவிரயம் செய்து தான் முழுமையான தகவல்களை தெரிந்து கொள்ளும் நடைமுறை இருந்து வந்தது. இந்தியாவின் எந்த பகுதியில் உள்ள வாகனங்களாக இருந்தாலும், அவற்றின் எண்களை, எஸ்.எம்.எஸ்., மூலம் அனுப்பி, அதன் விவரத்தை மறு நிமிடமே அறிந்து கொள்ளும் நடைமுறை வந்துள்ளதால், வாகன ஓட்டுனர்கள் மற்றும் போக்குவரத்து அதிகாரிகளுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். மொபைல் போனில் கிரியேட் மெசேஜ் மெனுவில், வாகன் என டைப் செய்து ஒரு ஸ்பேஸ் விட்டு, வண்டியின் எண்ணை இடைவெளி விடாமல் டைப் செய்ய வேண்டும். உதாரணமாக vahan tn58b0007 இந்த மெசேஜை, 09212357123 என்ற எண்ணிற்கு அனுப்ப வேண்டும். உடனடியாக, அனுப்பப்பட்ட வண்டியின் உரிமையாளர், என்ன வகையான வண்டி, ரோடு டாக்ஸ் விவரங்கள் நமக்கு அனுப்பப்பட்டுவிடும்.
மதுரை மத்திய வட்டார போக்குவரத்து அலுவலர் கல்யாண்குமார் கூறுகையில், ''இந்த வசதியினால், எல்லாரும் பயன்பெற முடியும். வாகனங்கள் வைத்திருப்பவர்களுக்கு இது ஒரு வரப்பிரசாதம். இந்த வசதியினால், ஏற்கனவே இருந்த நடைமுறை சிக்கல்களுக்கு தீர்வு கிடைத்துள்ளது'' என்றார்.

Advertisement

மேலும் ஆட்டோமொபைல் செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)