பதிவு செய்த நாள்
11 மார்2012
02:23
மெக்சிகோ:சென்ற 2011ம் ஆண்டில், டேப்லெட் கம்ப்யூட்டர் விற்பனையில் ஆப்பிள் நிறுவனம் முன்னணியில் உள்ளது என, தனியார் ஆய்வு நிறுவனமொன்று தெரிவித்துள்ளது.ஆப்பிள் நிறுவனம்,"ஐபாட்' என்ற பெயரில்"டேப்லெட்' கம்ப்யூட்டர்களை விற்பனை செய்து வருகிறது. சென்ற 2011ம் ஆண்டில் இந்நிறுவனம், 4.05 கோடி "ஐபாட்' களை விற்பனை செய்துள்ளது. இதையடுத்து, "டேப்லெட்'சந்தையில், 62 சதவீத சந்தை பங்களிப்புடன், ஆப்பிள் நிறுவனம் தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது.
அடுத்த இடத்தில் உள்ள சாம்சங் நிறுவனம், 9 சதவீத சந்தை பங்களிப்பை கொண்டுள்ளது. இந்நிறுவனம்,"கேலக்சி லைன்' என்ற பெயரில், 61 லட்சம் "டேப்லெட்' கம்ப்யூட்டர்களை விற்பனை செய்துள்ளது. அமேசான் டாட் காம் நிறுவனம், "கிண்டல் பையர்' என்ற பெயரில், 39 லட்சம் "டேப்லெட்'களை விற்பனை செய்துள்ளது. இந் நிறுவனத்தின் சந்தை பங்களிப்பு, 6 சதவீதம்.பர்ன்ஸ் அண்டு நோபல் நிறுவனத்தின் " நூக்' (33 லட்சம்), ஏசுஸ்டெக் கம்ப்யூட்டர் நிறுவனத்தின் "டிரான்ஸ்பார்மர் லைன்' (21 லட்சம்) மற்றும் இதர நிறுவனங்களின் (94 லட்சம்) சந்தை பங்களிப்பு முறையே, 5 சதவீதம், 3 சதவீதம், 14 சதவீதம் என்ற அளவில் உள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|