தங்க நகை மீதான சுங்கவரி தற்காலிக ரத்து:பிரணாப்தங்க நகை மீதான சுங்கவரி தற்காலிக ரத்து:பிரணாப் ... ஆலைகள் அதிக நிலுவை வைத்துள்ள போதிலும் கரும்பு பயிரிடுவதில் விவசாயிகளுக்கு அதிக ஆர்வம் ஆலைகள் அதிக நிலுவை வைத்துள்ள போதிலும் கரும்பு பயிரிடுவதில் ... ...
வர்த்தகத்திற்கு ஊக்கம் அளிக்கும் வகையில் புதிய வரிகளை திரும்ப பெற்றது மத்திய அரசு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

08 மே
2012
00:28

புதுடில்லி:நடப்பு 2012-13ம் நிதியாண்டிற்கான, மத்திய பட்ஜெட்டில், பல புதிய வரிகள் அறிவிக்கப்பட்டன. பொருளாதார வளர்ச்சி மற்றும் வர்த்தக நடவடிக்கைகளுக்கு ஊக்கம் அளிக்கும் வகையில், பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட பல புதிய வரிகள் விலக்கி கொள்ளப்படுவதாக, பார்லிமென்டில், நிதி மசோதாவைத் தாக்கல் செய்யும்போது, மத்திய நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜி தெரிவித்தார்.மத்திய அரசின், பல புதிய வரி விதிப்புகள், அன்னிய நிதி நிறுவனங்கள், தங்க ஆபரண விற்பனையாளர்கள், ரியல் எஸ்டேட் உள்ளிட்ட பல துறையினருக்கு பாதிப்பு அளிப்பதாக இருந்தது. இதற்கு, நாடு தழுவிய அளவில் கடும் எதிர்ப்பு நிலவியது. இதை கருத்தில் கொண்டு, நிதி அமைச்சர், ஒரு சில புதிய வரிகள் விலக்கி கொள்ளப்படுவதாக, அறிவித்தார்.
அன்னிய நிதி நிறுவனங்கள்:மத்திய அரசின், புதிய விதிப்புகளுள் ஒன்றான, பொது வரி தவிர்ப்பு எதிர் சட்டத்தின் (ஜி.ஏ.ஏ.ஆர்.) கீழ், அன்னிய நிதி நிறுவனங்கள், இந்தியாவில் மேற்கொள்ளப்படும் நேரடி முதலீடு மற்றும் பங்கு சார்ந்த முதலீட்டு திட்டங்களில், வரி பிடித்தம் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
இதனால், பல அன்னிய நிதி நிறுவனங்கள், இந்தியாவில் முதலீடு செய்வதை தவிர்த்ததுடன், பங்கு சார்ந்த முதலீட்டுத் திட்டங்களிலும், முதலீடு குறைந்து போனது.
குறிப்பாக, மொரிஷியஸ் உள்ளிட்ட வெளி நாடுகளிலிருந்து மேற்கொள்ளப்படும் அன்னிய முதலீட்டிற்கு, அதிக வரி பிடித்தம் இருக்கும் என்ற நிலைப்பாடு உருவானது.
இதை தவிர்க்கும் வகையில், நிதி மசோதாவில், பொது வரி தவிர்ப்பு எதிர் சட்டம், ஓராண்டிற்கு தள்ளி வைக்கப்படுவதாகவும், இது, வரும் 2013ம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் அமலுக்கு வரும் என அமைச்சர் தெரிவித்தார்.
பல அன்னிய நிதி நிறுவனங்கள், இந்தியாவில் மேற்கொள்ளப்படும் முதலீட்டிற்கு, வரி செலுத்த வேண்டும் என்ற நோக்குடன் தான், இந்த சட்டம் கொண்டு வரப்பட்டது. ஆனால், தற்போது, அன்னிய முதலீடுகள் குறைந்த போனதை அடுத்து, மத்திய அரசு, இந்த சட்டத்தை விலக்கி கொண்டுள்ளதாக கூறப்படுகிறது.தங்க ஆபரண வரி வாபஸ் :மேலும், பிராண்டு செய்யப்பட்ட மற்றும் பிராண்டு செய்யப்படாத ஆபரணங்கள் மீது உற்பத்தி வரி விதிக்கப்பட்டிருந்தது. இதுவும் தற்போது விலக்கி கொள்ளப்பட்டுள்ளது. இதுதவிர, ஒரு வாடிக்கையாளர், 2 லட்சம் ரூபாய் மதிப்பிற்கு, தங்க ஆபரணங்களை ரொக்கத்திற்கு வாங்கும் நிலையில், மூல வரி பிடித்தம் செய்யப்பட வேண்டும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்த வரி விதிப்பிற்கு, நாடு தழுவிய அளவில், தங்க ஆபரண விற்பனையாளர்கள், தொடர்ந்து, 21 நாட்கள் கடையடைப்பு மேற்கொண்டனர்.இதுகுறித்து மத்திய நிதி அமைச்சர், மறு பரிசீலனை செய்ய வேண்டும் என கோரிக்கை விடப்பட்டது. அதற்கு, நிதி அமைச்சர் உத்தரவாதம் அளித்ததை அடுத்து, கடையடைப்பு விலக்கி கொள்ளப்பட்டது. இந்நிலையில், நேற்று தாக்கல் செய்யப்பட்ட நிதி மசோதாவில், இந்த வரி பிடித்ததற்கான உச்ச வரம்பு, 5 லட்சம் ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.
நிலம் விற்பனை:மத்திய அரசு, கருப்பு பண புழக்கத்தை தடுக்கும் வகையில், பட்ஜெட்டில், அசையா சொத்துகள் (விளை நிலங்கள் தவிர) விற்பனை செய்யப்படும் போது, மூல வரியாக, 1 சதவீதம் பிடித்தம் செய்யப்படும் என அறிவித்திருந்தது.
இதன்படி, ஆறு பெரு நகரங்களில், 50 லட்சம் ரூபாய்க்கும் அதிகமாகவும், இதர நகரங்களில், 20 லட்சம் ரூபாய்க்கும் அதிகமாக மேற்கொள்ளப்படும் அசையா சொத்து விற்பனைக்கு, 1 சதவீதம் வரி பிடித்தம் செய்யும் வகையில், பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டிருந்தது.
இதற்கு, இந்திய தொழிலக கூட்டமைப்பு (சி.ஐ.ஐ.), 'கிரெடாய்' உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள், இதை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என கூறியிருந்தன. மேலும், இந்த வரி விதிப்பு, நாட்டில், சொத்துகளின் விலை உயர்வுக்கு வழி வகுக்கும் என தெரிவித்தன.இதைக் கருத்தில் கொண்டு, மத்திய அரசு, இந்த, 1 சதவீத வரி விதிப்பும் விலக்கி கொள்ளப்படுவதாக, நேற்றைய நிதி மசோதா தாக்கலில் தெரிவித்துள்ளது.
பொது வரி தவிர்ப்பு எதிர் சட்டம் மற்றும் தங்க ஆபரணங்கள் மீதான, வரி விலக்கல் போன்ற அறிவிப்புகள் வெளிவந்த பிறகு, மிகவும் சரிவடைந்து காணப்பட்ட, பங்கு வர்த்தகம், மதியத்திற்கு பிறகு, சூடுபிடித்தது.
பொது வரி தவிர்ப்பு எதிர்ப்பு சட்டம் ஓர் ஆண்டிற்கு ஒத்திவைப்பு
ஆபரணங்கள் மீதான உற்பத்தி வரி ரத்து
ரொக்கத்திற்கு தங்கம் வாங்கும் போது, மூல வரி
பிடித்தத்திற்கான உச்ச வரம்பு ரூ.5 லட்சமாக உயர்வு
அசையா சொத்து விற்பனையில் 1 சதவீத மூலவரி ரத்து

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)