பதிவு செய்த நாள்
07 ஜூன்2012
14:29

ஜப்பான் நாட்டை சேர்ந்த டொயோட்டா கார் நிறுவனம், இந்தியாவில் கிர்லோஸ்கர் நிறுவனத்துடன் இணைந்து செயல்படுகிறது. இந்த நிறுவனம், எதியோஸ் கார் முதல், லேண்ட் குருசையர் வரை, பல மாடல் கார்களை இந்தியாவில் விற்பனை செய்து வருகிறது. கடந்த ஆண்டு, இந்த நிறுவனம், 1.3 லட்சம் கார்களை விற்பனை செய்தது. நடப்பு ஆண்டில், 1.8 லட்சம் கார்களை விற்பனை செய்ய இலக்கு நிர்ணயித்துள்ளது.
இந்த சூழ்நிலையில், அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு குறைந்து வருவது, இந்த நிறுவனத்துக்கு, பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. டாலருக்கு எதிராக, இந்திய ரூபாயின் மதிப்பில், ஒரு ரூபாய் குறைந்தால், இந்த நிறுவனத்துக்கு, ஆண்டுக்கு ரூ.80 கோடி அளவுக்கு நஷ்டம் ஏற்படும். கடந்த நான்கு மாதங்களில், மாதத்துக்கு ரூ.15 கோடி என்ற அளவில், ரூ.60 கோடி வரை, இந்த நிறுவனத்துக்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளது. எனவே, கார்களின் விலையை ஒரு சதவீதத்துக்கு இந்த நிறுவனம் உயர்த்தியுள்ளது. இந்த விலை உயர்வு உடனடியாக அமலுக்கு வருகிறது. எதியோஸ் டீஸல் காரின் விலையில் ஒரு சதவீதமும், இன்னோவா காரின் விலையில் ஒரு சதவீதமும் உயர்த்தப்பட்டுள்ளது. ஃபார்ச்சூனர் மற்றும் எதியோஸ் லிவா டீஸல் கார்களின் விலையில் அரை சதவீதமும் உயர்த்தப்பட்டுள்ளது.
மேலும் ஆட்டோமொபைல் செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|