பதிவு செய்த நாள்
09 ஜூன்2012
01:13
மன்ஹாட்டன்:நடப்பு 2012ம் ஆண்டில், இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி (ஜி.டீ.பி.) 6.7 சதவீதம் என்றளவில் இருக்குமென, ஐக்கிய நாடுகள் சபை (ஐ.நா.) குறைத்து மதிப்பீடு செய்துள்ளது. இது, முந்தைய மதிப்பீட்டில், 7.7 சதவீதமாக இருக்குமென தெரிவிக்கப்பட்டிருந்தது. ஐரோப்பிய நாடுகளின் கடன் நெருக்கடி, உலகின் பல நாடுகளின் பொருளாதாரத்தை மிகவும் பாதிப்பதாக உள்ளது.நடப்பாண்டில், சர்வதேச பொருளாதார வளர்ச்சி 2.5 சதவீதம் என்றளவிலும், வரும் 2013ம் ஆண்டில், 3.1 சதவீதம் என்றளவிலும் இருக்குமென மதிப்பிடப்பட்டுள்ளது.
இது,சென்ற 2011ம் ஆண்டில் 2.7 சதவீதம் என்றளவில் இருந்தது.நடப்பு 2012ம் ஆண்டில், தெற்கு ஆசியாவின் பொருளாதார வளர்ச்சி 5.6 சதவீதமாக சற்று குறையும் என மதிப்பிடப்பட்டுள்ளது. இது, இதற்கு முந்தைய 2011ம் ஆண்டில், 6.1 சதவீதம் என்றளவில் அதிகரித்து காணப்பட்டது. சீனாவின் பொருளாதார வளர்ச்சி குறைந்து போனது மற்றும் வளர்ந்த நாடுகளின் தேவையில் ஏற்பட்டுள்ள மந்தநிலை போன்றவற்றால், தெற்காசிய நாடுகளின் வளர்ச்சி பாதிக்கப்பட்டுள்ளது. கடந்த 2011ம் ஆண்டில், 9.2 சதவீதம் என்றளவில் அதிகரித்துக் காணப்பட்ட சீனாவின் பொருளாதார வளர்ச்சி, நடப்பாண்டில், 8.3 சதவீதமாக குறையும் என, ஐ.நா. மேலும் தெரிவித்துள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|