பதிவு செய்த நாள்
28 ஜூன்2012
10:45

இந்தியாவில், 10,000 கி.மீ., தூரத்துக்கு, தேசிய நெடுஞ்சாலைகள் உள்ளன. இவற்றில், 200 இடங்களில், சுங்கசாவடிகள் உள்ளன. இங்கு வாகனங்களை நிறுத்தியே, சுங்க வரியை வசூலிக்கின்றனர். நாடு முழுவதும் சரக்கு போக்குவரத்து, பெரும்பாலும் சாலை வழியாகவே நடக்கிறது. ஆனால், சுங்கசாவடிகளில் ஏற்படும் காலதாமதம் பல விதங்களில் நாட்டுக்கு நஷ்டத்தை ஏற்படுத்துகிறது. இதுகுறித்து ஆய்வு செய்த, கோல்கத்தாவை சேர்ந்த ஐ.ஐ.எம்., கல்வி நிறுவனமும், இந்திய போக்குவரத்து கழகமும், ஆண்டு தோறும், ரூ.87,000 கோடி அளவுக்கு நஷ்டம் ஏற்படுவதாக சுட்டிக் காட்டியுள்ளன.
இப்பிரச்னை குறித்து, மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சர் சி.பி.ஜோஷி கூறியதாவது: இந்திய சிறப்பு அடையாள அட்டை வாரிய தலைவர் நந்தன் நிலகேனி தலைமையிலான கமிட்டி பரிந்துரையின்படி, சுங்கசாவடிகளில், "ரேடியோ பிரிக்வன்சி ஐடென்டிடி(ஆர்.எஃப்.ஐ.டி.,) என்ற திட்டம் செயல்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. சோதனை ரீதியாக, ஹரியானாவில் பஞ்சகுலா அருகே சந்திமந்திர் என்ற இடத்தில், டில்லி -பர்வனு நெடுஞ்சாலையில் உள்ள சுங்கசாவடியில் இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது.
இந்த திட்டத்தின்படி, பிரீ -பெய்டு மொபல் ஃபோன் கார்டு போல, முன்கூட்டியே கட்டணம் செலுத்தி, வாகனங்களில் ஒட்டக்கூடிய ஸ்டிக்கர்களை வாங்கி கொள்ளலாம். இந்த ஸ்டிக்கர்களில், உள்ள விஷயங்களில் படிக்கும் வகையில், சுங்கசாவடிகளில் விசேஷ கருவி அமைக்கப்படும். சுங்க சாவடிகளை வாகனங்கள் கடந்து செல்லும் போது, இந்த ஸ்டிக்கரை படித்து, விசேஷ கருவி கட்டணத்தை பெற்றுக் கொள்ளும். இந்த பிரீ -பெய்டு ஸ்டிக்கரை அவ்வப்போது புதுப்பித்து கொள்ளலாம். இதன் மூலம் சுங்க சாவடிகளில், வாகனங்கள் நிற்க வேண்டிய அவசியம் ஏற்படாது. மேலும், கூடுதலாக வசூலிக்கின்றனர் என்ற குறையும் போக்கப்படும். இந்த திட்டம் படிப்படியாக நாடு முழுவதும் இரண்டு ஆண்டுகளில் அமல்படுத்தப்படும். இவ்வாறு அமைச்சசர் சி.பி.ஜோஷி கூறினார்.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|