பதிவு செய்த நாள்
07 ஜூலை2012
00:17

புதுடில்லி:பொதுத் துறையை சேர்ந்த மூன்று எண்ணெய் நிறுவனங்களுக்கு, சென்ற ஜூன் மாதம், மத்திய அரசு 14 ஆயிரம் கோடி ரூபாய் மானியம் வழங்கியுள்ளது.இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன், பாரத் பெட்ரோலியம் கார்ப்ப ரேஷன், ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் ஆகிய மூன்று எண்ணெய் நிறுவனங்கள், அடக்க விலைக்கும் குறைவாக டீசல், சமையல் எரிவாயு மற்றும் மண்ணெண்ணெயை விற்பனை செய்து வருகின்றன.
இதனால், இந்நிறுவனங்களுக்கு மத்திய அரசு, மானியம் வழங்கி வருகிறது. இதன்படி சென்ற 2011-12ம் நிதியாண்டில், ஏற்கனவே வழங்கப்பட்டது போக, 38,500 கோடி ரூபாய் வழங்க வேண்டியுள்ளது.இதில், சென்ற ஜூன் இறுதியிலும், நடப்பு ஜூலை 3ம் தேதியிலும், இரு தவணைகளாக, 14 ஆயிரம் கோடி ரூபாய் மானியம் வழங்கப்பட்டுள்ளது. எஞ்சிய, 24,500 கோடி ரூபாய் மானியம், வரும் ஆகஸ்ட் இறுதிக்குள் வழங்கப்படும் என, எண்ணெய் நிறுவன அதி காரி ஒருவர் தெரிவித்தார்.
மேலும் கம்மாடிட்டி செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|