தங்கம் விலை சவரனுக்கு ரூ.88 உயர்வுதங்கம் விலை சவரனுக்கு ரூ.88 உயர்வு ... இந்துஸ்தான் ஸிங்க் வருவாய் ரூ.2,748 கோடி இந்துஸ்தான் ஸிங்க் வருவாய் ரூ.2,748 கோடி ...
நானோ காரில் 26,500 கி.மீ., பயணம் அசத்திய கேரளாவின் 63 வயது முதியவர்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

31 ஜூலை
2012
13:47

உலகளவில் மிகவும் விலை குறைந்த கார் என்ற பெருமைக்கு உரியது, டாடா மோட்டார்ஸின் நானோ கார். எனினும், இந்த கார், நகரப் பயணத்துக்கு மட்டுமே உகந்தது என்ற கருத்து உண்டு. இதை முறியடிக்க, கேரளாவின் கொச்சி நகரத்தை சேர்ந்த, 63 வயது முதியவர் தாமஸ் சாக்கோ என்பவர், நானோ காரில் ஒரு இந்திய பயணம் மேற்கொள்ள திட்டமிட்டார். இவர், காரில் சாகச பயணம் செய்வதில் மிகவும் விருப்பம் உள்ளவர். பல கார் பந்தயங்களில் பங்கேற்றவர். 27 நாடுகளில், கார் ஓட்டியுள்ளார்.
நானோ காரில் இந்தியாவை சுற்றி வர விரிவான பயணம் திட்டம் ஒன்றை சாக்கோ உருவாக்கினார். அதன்படி, நாட்டின் கிழக்கு பகுதியில் அருணாச்சல பிரதேசத்தில் உள்ள தவாங்க், மேற்கு பகுதியில் குஜராத்தில் உள்ள துவாரகா, வடக்கில் காஷ்மீரில் உள்ள லடாக், தெற்கு பகுதியில் தமிழகத்தில் உள்ள கன்னியாகுமரி என நான்கு பகுதிகளுக்கு சென்று வர முடிவு செய்தார். இத்துடன், நாட்டின் அனைத்து முக்கிய நகரங்கள் வழியாகவும், யுனியன் பிரதேசங்கள் வழியாகவும், 100 நகரங்கள் மற்றும் சிறுநகரங்களை தொட்டு செல்லும் வகையில் பயணம் திட்டம் உருவானது. இந்த சாகச பயணத்தை, 78 நாட்களில், தாமஸ் சாக்கோ வெற்றிகரமாக முடித்துள்ளார்.

கரடு முரடான சாலைகளிலும், மழை, குளிர், வெயில் என அனைத்து வானிலை சூழ்நிலைகளையும் கடந்து இந்த நானோ கார் பயணம் சென்றுள்ளது. வழியில் எந்த இடத்திலும் நானோ காருக்கு பிரச்னை இல்லை என்று சாக்கோ தெரிவித்தார். மேலும், 78 நாளில், 26,500 கி.மீ., பயணம் செய்த போது காஷ்மீரின் லடாக் பகுதியில், நாட்டின் மிக உயரமான இடத்தில் அமைந்துள்ள கர்தங் லா மற்றும் தங்லங் லா ஆகிய சாலைகளிலும், நானோ கார் மிகவும் சிறப்பாக மலையேறியது என்றும் குறிப்பிட்டார்.
நானோ கார் தற்போது புது மாற்றங்களுடன் கிடைக்கிறது. இதில் 623 சிசி இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு 25.4 கி.மீ. மைலேஜ் தருகிறது என்று டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. விரைவில் சி.என்.ஜி., வசதியுடன் நானோ கார் விற்பனைக்கு வரும் என்றும், டீஸல் கார் குறித்த ஆய்வு பணியும் நடந்து வருவதாகவும் நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)