பதிவு செய்த நாள்
03 ஆக2012
11:17
மதுரை: மதுரை தமுக்கம் மைதானத்தில் நடக்கும், "தினமலர்' வீட்டு உபயோகப் பொருட்கள் கண்காட்சியில், இந்தியாவில் முதன்முறையாக, ரூ.7 லட்சத்திற்கான 72 இன்ச், எல்.ஜி., சினிமா 3டி "டிவி' விற்பனைக்கு வந்துள்ளது.
கண்காட்சியில் நேற்று அறிமுகம் செய்யப்பட்ட அந்த "டிவி' "உலகின் மிகப்பெரிய சினிமா 3டி,' அந்தஸ்து பெற்றது. அதன், விலை ரூ.7 லட்சம். "தினமலர்' கண்காட்சியில் வந்து வாங்கினால், ரூ.55 ஆயிரம் மதிப்புள்ள, 11 ஆயிரத்து 250 வாட்ஸ் ஒலித்திறன் கொண்ட, "புளூ ரே' ஹோம் தியேட்டர் இலவசம். இச்சலுகை, ஆக., 6 வரை மட்டுமே.
"டுயல் பிளே கேம், ஸ்மார்ட் "டிவி' ஆப்சன்ஸ், மேஜிக் மவுஸ், "லவ்லி' ரிமோட்,' போன்றவை, "டிவி'யின் சிறப்பு அம்சம். "3டி'யை "கன்ட்ரோல்' செய்யும் வசதி உள்ளது.கவர்ச்சிகரமான தோற்றம் கொண்ட எல்.ஜி., சினிமா 3டி "டிவி'யை, உங்கள் வரவேற்பறையில் வைத்து மகிழ்விக்கலாம், எல்.ஜி., எலக்ட்ரானிக்ஸ் மார்க்கெட்டிங் மேலாளர் தினேஷ் கூறியதாவது: இந்தியாவில் முதன்முறையாக, உலகின் மிகப்பெரிய சினிமா 3டி "டிவி'யை மதுரையில் அறிமுகப்படுத்தியதில், பெருமையடைகிறோம். "தினமலர்' கண்காட்சியில், மட்டும், இந்த "டிவி'க்கு சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது, என்றார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|