பதிவு செய்த நாள்
18 ஆக2012
00:13
சென்னை:டி.வி.எஸ். மோட்டார் நிறுவனத்தின், "ஸ்டார் சிட்டி' மோட்டார் சைக்கிள், புதிய தொழில்நுட்பத்தில் தயாரிக்கப்பட்டு, சந்தைக்கு வந்துள்ளது. முற்றிலும் கறுப்பு நிறத்தில் உருவாக்கப்பட்டுள்ள, 110 சிசி திறன் கொண்ட, இந்த மோட்டார் சைக்கிளை, இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் மகேந்திரசிங் தோனி அறிமுகப்படுத்தினார்.
இதுகுறித்து, டி.வி. எஸ். மோட்டார் நிறுவனத்தின் தலைவர் (சந்தைப்படுத்துதல்) எச்.எஸ். கோயிந்தி கூறியதாவது:புதிய வடிவமைப்பு, எரிபொருள் சிக்கனம், எளிதில் திருப்புகின்ற வசதி, கறுப்பு நிறத்திலான அலாய் வீல்கள் மற்றும் பின்புற விளக்கு வசதி போன்றவை இதன் கூடுதல் சிறப்பம்சங்களாகும். இதையடுத்து, ஸ்டார் சிட்டி பைக்கின் விற்பனை, 15 சதவீதம் அதிகரிக்கும்.இந்த புதிய மோட்டார் சைக்கிளின் விலை, 40,775 ரூபாயாக (எக்ஸ்ஷோரூம், தமிழ்நாடு) நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு கோயிந்தி கூறினார்.
மேலும் சந்தையில் புதுசு செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|