பதிவு செய்த நாள்
17 அக்2012
00:47

- பிசினஸ் ஸ்டாண்டர்ட் உடன் இணைந்து - ரசாயன ஆய்வு துறைக்கு, அதிக அளவில் நிதி ஒதுக்கினால் மட்டுமே, வரும் ஆண்டுகளில் சர்வதேச போட்டியை இந்தியாவால் சமாளிக்க முடியும் என, இத்துறை வல்லுனர்கள் தெரிவித்து உள்ளனர்.மும்பையில், ரசாயனத் துறை சார்ந்த கருத்தரங்கில் அவர்கள் பேசியதாவது:இந்திய ரசாயனத் துறையின் ஆண்டு விற்பனை, 5.50 லட்சம் கோடி ரூபாயாக உள்ளது. இதில், 0.5 சதவீத அளவிற்கே, ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டிற்காக செலவிடப்படுகிறது.ஆசிய நாடுகள்ஆனால், சர்வதேச ரசாயனத் துறையில் ஆசிய நாடுகளின் பங்களிப்பு அதிகரித்து வருவதால், இந்தியாவும், இத்துறையில் வளர்ச்சி கண்டு வரும் முக்கிய நாடாக உருவெடுக்கும். சர்வதேச ரசாயன நிறுவனங்களின் பார்வை, இந்தியாவின் பக்கம் திரும்பும்.இத்தகைய சூழலை சாதகமாக்கிக் கொள்ளும் வகையில், இந்தியா தன்னை தயார்படுத்திக் கொள்ள வேண்டும்.அடுத்த ஐந்தாண்டுகளில், இந்திய ரசாயனத் துறையில், அதன் விற்பனைக்கு நிகரான ஆய்வு மற்றும் மேம்பாட்டுக்கான முதலீடு, 0.5 சதவீதத்தில் இருந்து, 4 சதவீதமாக உயரும். இந்த வகையில், இந்திய ரசாயன நிறுவனங்கள், வரும் 2017ம் ஆண்டில், ஆய்வு மற்றும் மேம்பாட்டிற்காக, 1,200 கோடி டாலர் செலவிடும் என, மதிப்பிடப்பட்டுள்ளது.சர்வதேச ரசாயன சந்தையில், இந்தியாவின் பங்களிப்பு, மூன்று சதவீதமாக, அதாவது 10,800 கோடி டாலர் என்ற அளவில் உள்ளது. இது, வரும் 2017ம் ஆண்டு, 11 சதவீதம் அதிகரித்து, 29 ஆயிரம் கோடி டாலராக உயரும். தற்போது அரசு எடுத்து வரும் நடவடிக்கையாலும், ரசாயன நிறுவனங்களின் முயற்சியாலும் இது சாத்தியமாகும் என, எதிர்பார்க்கப்படுகிறது.இந்தியாவில், அதிகரித்து வரும் தனிநபர் பயன்பாடு, உற்பத்தி துறையில் பெருகி வரும் போட்டி, ஏற்றுமதியில், சர்வதேச நாடுகளை சமாளிப்பதில் முன்னேற்றம் போன்றவற்றால், ரசாயனத் துறை, சிறப்பான அளவில் வளர்ச்சி காணும்.அதே சமயம், ஏற்றுமதியை பொறுத்தவரை, தற்போது ஐரோப்பிய நாடுகளின் பொருளாதார மந்தநிலையால், இந்திய ரசாயனத் துறையின் செயல்பாடும் பாதிக்கப்பட்டுள்ளது.நடப்பு ஐந்தாண்டு திட்ட கால (2012-17) மதிப்பீட்டின்படி, அமெரிக்கா, ஐரோப்பா போன்ற வளர்ந்த நாடுகள் மற்றும் சீனாவுடன் ஒப்பிடும்போது, இந்தியாவில் சிறப்பு வகை ரசாயனங்களுக்கான சந்தை வாய்ப்பு குறைவாகவே உள்ளது.மேம்படுத்தப்பட்ட ரசாயன பொருட்களை உருவாக்குவது, சிறப்பு வகை ரசாயனங்களின் பயன்பாட்டை அதிகரிப்பது போன்றவற்றுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்க வேண்டும்.
இதன் மூலம், அடுத்த 10 ஆண்டு களில், இந்திய ரசாயன சந்தை, சிறப்பாக வளர்ச்சி காணும்.இந்திய வேளாண் துறையில், பூச்சிக் கொல்லி மருந்துகளின் பயன்பாடு, ஒரு ஹெக்டேருக்கு 580 கிராம் என்ற அளவில், மிகவும் குறைந்து காணப்படுகிறது. இது, சீனாவில், 2 கிலோவாக உள்ளது.பெருகி வரும் மக்கள் தொகை, அதற்கேற்ப அதிகரித்து வரும் உணவுப் பொருட்களுக்கான தேவை போன்றவற்றை கருத்தில் கொண்டு, வேளாண் விளைபொருட்களின் உற்பத்தியை அதிகரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.நாட்டில் விளைநிலங்கள் எல்லாம் வேகமாக வீட்டு மனைகளாக உருமாறிக் கொண்டிருக்கும் நிலையில், குறைந்த பயிர் பரப்பில், அதிக சாகுபடியை மேற்கொள்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.இதற்கு, பயிர் பரப்பளவை அதிகரிப்பது, வேளாண் துறையை இயந்திரமயமாக்குவது, பாசன கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவது உள்ளிட்ட நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.அதுமட்டுமின்றி, உணவு தானியங்களின் உற்பத்தியை பெருக்க, வேளாண் ரசாயனங்களின் பயன்பாட்டையும் அதிகரிக்க வேண்டும்.இந்தியாவில், ஒரு ஹெக்டேர் பரப்பளவில், சாரசரியாக இரண்டு டன் வேளாண் விளைபொருட்கள் விளைகின்றன. இது, சீனாவில் ஐந்து டன்னாக உள்ளது. இந்த வளர்ச்சிக்கு, வேளாண் ரசாயனங்கள் குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கி வருகின்றன.
சர்வதேச போட்டியை சமாளிக்க: சர்வதேச ரசாயன சந்தையில், இந்தியாவின் பங்களிப்பு, 10,800 கோடி டாலர் என்ற அளவில் உள்ளது. இது, வரும் 2017ம் ஆண்டு,11 சதவீதம் அதிகரித்து, 29 ஆயிரம் கோடி டாலராக உயரும்.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|