ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.104 உயர்வுஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.104 உயர்வு ... ஆபரண தங்கம் விலை சவரனுக்கு ரூ.168 உயர்ந்தது ஆபரண தங்கம் விலை சவரனுக்கு ரூ.168 உயர்ந்தது ...
ரூ.10000க்கும் குறைவான விலையில் வசதிகள் கொண்ட மொபைல் போன்கள்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

20 நவ
2012
16:39

தீபாவளி செலவு போக மீதமிருப்பது கொஞ்சமே. வசதிகள் அதிகம் தரும் ஸ்மார்ட் போன்களின் விலை, நம் பட்ஜெட்டில் அடங்கவில்லை. இருப்பினும் கொஞ்சமாவது நவீன வசதிகள் கொண்ட மொபைல் போன் ஒன்றை வாங்க வேண்டும் எனத் திட்டமிடுகிறீர்களா! இதோ, மொபைல் போன் சந்தையில் நம் கண்ணில் பட்ட சில மொபைல் போன்களை இங்கு பார்க்கலாம். இவை நாம் எதிர்பார்க்கும் வசதிகளைத் தருவதோடு, விலையும் ரூ.10,000க்குள் இருக்கின்றன. ஆண்ட்ராய்ட் ஆப்பரேட்டிங் சிஸ்டம் இருப்பதால், சில ஸ்மார்ட் போன்கள் குறைந்த விலையில் கிடைக்கின்றன.
நோக்கியா ஆஷா 200: விலை ரூ.3,800. (Adexmart.com என்ற தளத்தில் காணவும்.) மிக அழகான தோற்றத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளது. 2 எம்பி கேமரா, மியூசிக் பிளேயர், மைக்ரோ எஸ்.டி. கார்டுடன் 32 ஜிபி சப்போர்ட், குவெர்ட்டி கீ போர்ட், பேஸ்புக் மற்றும் ட்விட்டருக்கான லிங்க்ஸ், டூயல் சிம் என நாம் எதிர்பார்க்கும் வசதிகள் கொண்டது. விலை மற்ற இடங்களில் ஏறத்தாழ இருக்கும்.
சாம்சங் கேலக்ஸி சாட்: விலை ரூ.8,500. உங்களுக்கு ஆண்ட்ராய்ட் போன், குவெர்ட்டி கீ போர்டுடன் வேண்டும் எனில், காலக்ஸி சேட் ஒரு நல்ல போன். இதில் 830 மெகா ஹெர்ட்ஸில் இயங்கும் சி.பி.யு. இருப்பதால், ஆண்ட்ராய்ட் 4.0. ஐஸ்கிரீம் சாண்ட்விச் சிஸ்டத்தை இயக்கும் திறன் கொண்டுள்ளது. 3 அங்குல டச் ஸ்கிரீன், 2 எம்.பி. கேமரா, ஏ–ஜி.பி.எஸ். வசதி, வை–பி இணைப்பு ஆகியவை கிடைக்கின்றன. திரையைத் தொட்டு இயக்க வசதி தரும் யூசர் இன்டர்பேஸினை விரும்புபவரா நீங்கள்! அப்படியானால், இந்த போன் உங்கள் பட்ஜெட்டுக்குள் மகிழ்ச்சியைக் கொடுக்கும்.
நோக்கியா ஆஷா 311: விலை ரூ.6,400. பயன்படுத்த மிக, மிக எளிதான போன் ஒன்றை விரும்புகிறீர்களா! இந்த போன் உங்களுக்கு ஏற்றதாக இருக்கும். எளிமையான யூசர் இன்டர்பேஸ், நல்ல ஒலி, 3.2 எம்பி கேமரா, வைபி, புளுடூத், 3ஜி மற்றும் ஸ்மார்ட் போன்களில் காணப்படும் சில வசதிகள் ஆகியவை உள்ளன. எல்லாவற்றிற்கும் மேலாக, டிவியுடன் இதனை இணைக்கலாம். MicromaxCanvasA1002/2/nokaiasha303/sony xperiattipo /SamsungChat527/nokia_asha_201_200
மைக்ரோமேக்ஸ் சூப்பர் போன் கேன்வாஸ் ஏ 100: விலை ரூ.10,000. விலை அதிகமான சாம்சங் கேலக்ஸி நோட் 2 விலை பார்த்து பெருமூச்சு விட்டதோடு சரி என்ற நிலையில் உள்ளவர்களுக்கு, இந்த மைக்ரோமேக்ஸ் போன் சரியாக இருக்கும். 5 அங்குல அகலத்தில் திரை (அம்மாடியோவ்! அப்ப நல்லா சினிமா பார்க்கலாம்) ஒரு கிகா ஹெர்ட்ஸ் வேக சி.பி.யு., ஆண்ட்ராய்ட் ஐஸ்கிரீம் சாண்ட்விச் சிஸ்டம், 5 எம்.பி. கேமரா, 3ஜி, வை–பி, புளுடூத் மற்றும் ஜி.பி.எஸ். என நவீன வசதிகள் அனைத்தும் உள்ளன. இதன் கட்டமைப்பும் சிறப்பாக உள்ளது.
சோனி எக்ஸ்பீரியா டிப்போ: விலை ரூ.9,500. மெல்லிய தடிமன் அளவுடன் வடிவமைக்கப்பட்ட அழகான போன். ஸ்கிராட்ச் விழாத கண்ணாடியாலான திரை, 800 மெகா ஹெர்ட்ஸ் வேகத்தில் இயங்கும் ப்ராசசர், 512 எம்.பி. ராம் நினைவகம், 3.2 எம்பி கேமரா, புளுடூத் 2.1., வைபி, ஜி.பி.எஸ்., மைக்ரோ எஸ்.டி. கார்ட் மூலம் 32 ஜிபி வரை மெமரி அதிகப்படுத்தும் வசதி, ஆண்ட்ராய்ட் சாண்ட்விச் சிஸ்டம் என அனைத்திலும் உயர்ந்த திறன் கொண்ட இந்த போன் உங்களுக்கு நிச்சயம் உதவும்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)