பதிவு செய்த நாள்
02 டிச2012
00:21
சென்னை:கடந்த நாட்களில், மட்டும் ஆபரண தங்கம் விலை, சவரனுக்கு, 704 ரூபாய் குறைந்துள்ளது.சென்ற புதனன்று, 22 காரட் ஆபரண தங்கம், ஒரு கிராம், 3,037 ரூபாய்க்கும், ஒரு சவரன், 24,296 ரூபாய்க்கும் விற்பனையாகின.வியாழனன்று, இதன் விலை கிராமுக்கு, 60 ரூபாய் குறைந்து, 2,977 ரூபாய்க்கும், சவரனுக்கு, 480 ரூபாய் வீழ்ச்சிகண்டு, 23,816 ரூபாய்க்கும் விற்பனையாகின. வெள்ளியன்று, ஒரு கிராம் தங்கம், 2,963 ரூபாய்க்கும், சவரன், 23,704 ரூபாய்க்கும் விற்பனையானது.
இந்நிலையில், நேற்றும், தங்கம் விலை கிராமுக்கு, 14 ரூபாய் குறைந்து, 2,949 ரூபாய்க்கும், சவரனுக்கு, 112 ரூபாய் சரிவடைந்து, 23,592 ரூபாய்க்கும் விற்பனையாகின. 24 காரட், 10 கிராம் சுத்த தங்கம் விலை, 140 ரூபாய் குறைந்து, 31,545 ரூபாய்க்கு விற்பனையானது.ஆக, கடந்த நாட்களில், மட்டும் தங்கம் விலை கிராமுக்கு, 88 ரூபாயும், சவரனுக்கு, 704 ரூபாயும் குறைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|