பதிவு செய்த நாள்
26 டிச2012
14:00

உலகின் மிகப்பெரிய கார் தயாரிப்பு நிறுவனங்கள் எல்லாம் இந்தியாவை நோக்கி படை எடுக்க துவங்கி விட்டது. சூப்பர் கார்களின் விற்பனை இந்தியாவில் அதிகரித்திருப்பதே இதற்கு காரணம். உலக வங்கியின் கணிப்பின்படி இந்திய கோடீஸ்வரர்களின் எண்ணிக்கை கூடிக்கொண்டே வருகிறது. 2015ம் ஆண்டிற்குள் இன்றைய கோடீஸ்வரர்களின் எண்ணிக்கை இரட்டிப்பாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. தற்பொழுது 14 மில்லியன் இந்தியர்கள் தங்களுக்கென ஒரு கார் வைத்துள்ளனர். 2010ம் ஆண்டு 2 மில்லியன் கார் விற்றது. இது 2014ம் ஆண்டில் 3 மில்லியனை தாண்டும் என்றும் எதிர்ப்பார்க்கப்படுகிறது. சொகுசு கார் தயாரிப்பாளரான லேம்பார்கினி நிறுவனம் தன்னுடைய இரண்டாவது டீலர்ஷிப்பை துவங்கியுள்ளதும், ஃபெராரி மேலும் நான்கு டீலர்களை 2012ம் ஆண்டு டிசம்பருக்குள் சேர்க்க திட்டமிட்டுள்ளது.
இந்நிலையில் கவர்ச்சிகரமான கன்வர்ட்டிபிள் என்ற, காரின் மேற்கூரையை வேண்டும் போது திறந்துக் கொள்ளவும் மூடிக்கொள்ளவும் கூடிய வசதியுள்ள காரை இந்தியாவில் கொண்டு வந்துள்ளதும் குறிப்பிடத்தக்கது. இதமான வெயில் உடலில் படும்படி பயணம் செய்யவும், காற்றை கிழித்துச் செல்லும் வேகத்தை அனுபவிக்கவும் குளிர்காற்று, தென்றல் காற்றின் இனிமையை திறந்தவெளி காரில் அனுபவிக்கவும் இந்தியர்கள் விரும்பத்தொடங்கியுள்ளதும் இக்கார்களின் வருகைக்கு காரணமாகும். போர்ஷ் பாக்ஸ்டர் 911 பிஎம்டபிள்யு Z4, 6 சீரிஸ் மெர்சிடஸ் பென்ஸ் E க்ளாஸ், ஜாக்வார் XK, மெஸாரடி க்வாட்ரோபோர்ட் லேம்பார்கினி காலார்டோ ஃபெராரி கலிஃபோர்னியா போன்றவை இந்தியாவில் விற்பனைக்கு உள்ள சொகுசு கன்வர்ட்டிபிள்களாகும்.
மேலும் ஆட்டோமொபைல் செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|