பதிவு செய்த நாள்
29 டிச2012
11:43

இந்திய ஆட்டோமொபைல் துறையின் ஜாம்பவானாக விளங்கும் டாடா மோட்டார்ஸ் ட்ரக், பஸ், பல்உபயோக வாகனங்கள் மற்றும் பயணிகள் கார்கள் உற்பத்தியில் முன்னோடியாக திகழ்வது யாவரும் அறிந்ததே. புதுப்புது தொழில் நுட்பங்கள் மற்றும் நவீன அம்சங்களையும் தங்கள் வாகனங்களில் கொண்டு வரும் டாடா நிறுவனம், பொருட்கள் எடுத்துச் செல்லும் நான்கு சக்கர சிறிய ட்ரக்கை அறிமுகப்படுத்த எண்ணியது. அதன் விளைவாய் நல்ல செயல் திறனும், அதிகப்பாதுகாப்பும், சுலப பராமரிப்பும் அதே நேரம் அழகாகவும், வசதியாகவும், நியாயமான விலையிலும் இருக்கும்படியாக 2005ம் ஆண்டு கொண்டு வந்ததே டாடா ஏஸ் ஆகும். இதுவரை பத்து லட்சத்திற்கு மேல் விற்பனையாகி சாதனைப் படைத்துள்ளது. இந்த வெற்றியை தொடர்ந்து 2011-ல் ஏஸ் வாகனத்தை பல வகை மேம்படுத்தி டாடா சூப்பர் ஏஸ் என்னும் வாகனத்தை அறிமுகப்படுத்தியது. இந்த வாகனமும் விற்பனையில் வெற்றி நடைபோடுகிறது.
ஒரு டன் அளவிலான பொருட்களை எடுத்துச் செல்ல உதவும் சூப்பர் ஏஸ் விற்பனைக்கு வந்த முதல் வருடத்திலேயே விற்பனையில் உயர்ந்துள்ளது. எனவே சரக்கு வாகனங்களில் அதிக செயல்திறன் நிறைந்த பாதுகாப்புடன் தயாரிக்கப்பட்டு வணிக வாகன சந்தையில் தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்துக் கொண்டது டாடா சூப்பர் ஏஸ்.வணிக வாகனமான டாடா சூப்பர் ஏஸ் ஐந்து வித்தியாச வண்ணங்களில் கிடைக்கின்றது. இதன் எஞ்சின் 1405 சிசி டீசல் எஞ்சின் ஆகும். 70 hp பவரும் 4500 ஆர்பிஎம்மில் 135nm டார்க்கை வழங்குகிறது. இதன் கியர் சின்க்ரோமெஷ் gbs 65-5 ஸ்பீட் கியர் பாக்சுடன் வருகிறது. முன்புறம் டிஸ்க் ப்ரேக்கும் பின்புறம் ட்ரம் ப்ரேக்கும் பொருத்தப்பட்டுள்ளது. ஹைட்ராலிக் டபுள் - ஆக்டி டெலஸ்கோப்பிக் ஷாக் அப்சர்வர் அமைக்கப் பட்டுள்ளது. டாடா 475 IDI TCIC BS III மாடல் என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இது நான்கு சிலிண்டர் உடைய டர்போ இன்டர் கூல் டீசல் வகை சார்ந்தது.
70 பிஎச்பி பவரை கொண்டதாகும் அதிக பட்சமான 125 கிலோ மீட்டர் மணிக்கு என்ற வேகத்தில் பயணிக்கக் கூடியதாகவும் உள்ளது.
சூப்பர் ஏஸில் பவர் ஸ்டேயிரிங், பவர் வின்டோ பூட்டும் வசதி கொண்ட க்லவ் பாக்ஸ், முன்புறம் பக்கட் சீட், இருபுறமும் ரியர் வ்யூமிர்ரர், சன் வைசர் மற்றும் மொபைல் சார்ஜர் போன்ற வசதிகளுடன் வடிவமைக்கப் பட்டுள்ளது. முன்புற லைட்டும், க்ரில்லும் அகலமான சக்கரங்களும் இதற்கு கவர்ச்சியான தோற்றத்தையும் வழங்குகிறது. தற்போது இந்த வாகனத்திற்கு முதல் ஐம்பதாயிரம் கிலோ மீட்டர் அல்லது முதல் ஒரு வருடத்திற்கு வாரண்டி அளிக்கப்படுகிறது. கவர்ச்சிகரமான தோற்றம், நிறைந்த செயல்திறன் சுலபமான சுலபமான சொகுசான பயணம் போன்றவற்றை அளித்து பல குறு மற்றும் சிறு வியாபாரிகளின் தொழில் வளத்தை டாடா சூப்பர் ஏஸ் மேம்படுத்தியுள்ளது என்றால் மிகையல்ல.
மேலும் ஆட்டோமொபைல் செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|