பதிவு செய்த நாள்
02 மே2013
13:55

சென்ற மாதம், எல்.ஜி. நிறுவனம் தன் ஆப்டிமஸ் எல்3 மற்றும் ஆப்டிமஸ் எல் 7 ஆகியவற்றை இந்தியாவில் அறிமுகப்படுத்தியது. தற்போது ஆப்டிமஸ் எல் 5 டூயல் (இ 455) மொபைல் போன் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. என்னும் இணைய வர்த்தக தளத்தில் இது விற்பனைக்குக் கிடைக்கிறது. இதன் அதிக பட்ச சில்லரை விற்பனை விலை ரூ. 11,499.
இந்த போனில் 4 அங்குல கெபாசிடிவ் டச் ஸ்கிரீன், ஐ.பி.எஸ். டிஸ்பிளேயுடன் உள்ளது. இதன் ப்ராசசர் ஒரு கிகா ஹெர்ட்ஸ் திறன் கொண்டது. இதனை இயக்க ஆண்ட்ராய்ட் 4.1. ஜெல்லி பீன் சிஸ்டம் தரப்பட்டுள்ளது. எல்.இ.டி. பிளாஷ் இணைந்த 5 எம்.பி. திறன் கொண்ட கேமரா இயங்குகிறது. இதில் இரண்டு சிம்களை இயக்கலாம். சிம்களை மாற்றுவதற்கென தனியே கீ ஒன்று தரப்பட்டுள்ளது. ராம் மெமரி 512 எம்.பி. ஆகவும், ஸ்டோரேஜ் மெமரி 4 ஜிபி ஆகவும் உள்ளது. இதனை மைக்ரோ எஸ்.டி. கார்ட் கொண்டு 32 ஜிபி வரை உயர்த்தலாம். நெட்வொர்க் இணைப்பிற்கு 3ஜி, வை-பி, புளுடூத், ஏ-ஜி.பி.எஸ். ஆகிய தொழில் நுட்பங்கள் இயங்குகின்றன. இதன் பேட்டரி 1700 mAh திறன் கொண்டது.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|