தங்கம் விலை சவரனுக்கு ரூ.56  உயர்வு   தங்கம் விலை சவரனுக்கு ரூ.56 உயர்வு ... தங்கம் விலை சற்று குறைவு தங்கம் விலை சற்று குறைவு ...
ட்ரான்ஸ்மிஷன் பிரச்னைகளை நாமே கண்டுபிடிப்பது எப்படி
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

17 மே
2013
14:38

காரின் செயல்பாடு சிறப்பாக இருப்பதற்கு மிக முக்கியமானது என்ஜின் திறனும், ட்ரான்ஸ்மிஷன் எனப்படும் கியர் சிஸ்டமும் ஆகும். பொதுவாக வாகனத்தில் பிரச்சனை ஏற்படும்போது அது இரண்டு வகையாக இருக்கும். ஒன்று மெக்கானிக்கல் பிரச்சனை மற்றொன்று எலக்ட்ரிக்கல் பிரச்சனை. இதில் மெக்கானிக்கல் பிரச்சனைகள் புதுவிதமான ஓசைகள் மற்றும் உணர்வுகள் மூலம் ஏதோ சரியில்லை என்பதை ஓட்டுனருக்கு உணர்த்தும் இதில் ட்ரான்ஸ்மிஷனில் பிரச்சனை எனும்போது அதை பல விதமான அறிகுறிகள் மூலம் ஒரு நல்ல ஓட்டுனர் ஆரம்ப கட்டதிலேயே தெரிந்துக் கொள்ளலாம்.
ட்ரான்மிஷனில் பிரச்சனை எனும் நீண்ட கால உபயோகத்திற்கு பிறகே வரக்கூடிய ஒன்றாகும். ஆனால் பிரச்சனையை ஆரம்ப கட்டத்திலேயே கண்டுபிடித்து சரி செய்யாவிடில் பலத்த செலவை ஏற்படுத்தக் கூடிய பழுதாகவே அது பெரும்பாலும் அமைத்துவிடும். எனவே ட்ரான்ஸ்மிஷனில் ஏற்படும் பிரச்சனைகளை உடனடியாக கண்டுபிடிக்க எந்த மாதிரியான அறிகுறிகளை நாம் கவனிக்க வேண்டும் என்பதைப் பற்றி சற்றே விரிவாக இக்கட்டுரையில் காணலாம்.
கியர் மாறாமல் இருத்தல்
மானுவல் ட்ரான்ஸ்மிஷனில் உள்ள ஒரு பிரச்சனை க்ளட்ச்சை அழுத்திக்கொண்டு கியர் மாற்றும்போது கியர் மாறாமல் இருப்பது. இது நாம் வண்டியை ஸ்டார்ட் செய்து முதல் கியர்போடும் போது ஏற்படலாம் அல்லது ஒரு கியரிலிருந்து மற்றொரு கியருக்கு மாறும்போதும் ஏற்படலாம். இப்படி ஏற்பட்டால் அதற்கு காரணம் ட்ரான்ஸ்மிஷன் ஃப்ளூயிட் அல்லது கியர் ஆயில் குறைவாக இருப்பதால் இருக்கலாம். அல்லது ஆயிலின் தரம் குறைவாக (கொழுகொழுப்பு குறைவு) இருப்பதாலோ, கியர் ஷிஃப்ட் கேபிள் அல்லது க்ளட்ச் கேபிள் அட்ஜஸ்ட் செய்ய வேண்டியிருந்தாலோ கியர் மாறாமல் இருப்பதற்கு காரணமாக இருக்கலாம்.
தேவையற்ற ஓசைகள்
எந்தமாதிரியான ஓசை ஏற்பட்டால் அது கியர் பிரச்சனையாக இருக்கலாம் என்று உறுதியாக கூற முடியாவிட்டாலும் புதிதாக கேட்கும் ஒலியைக் கொண்டு நம்மால் கண்டு பிடிக்க முடியும். பொதுவாக ஒவ்வொரு காரிலும் ஒவ்வொரு விதமான ஓசைகள் கேட்கும் அதை கார் ஓட்டி பழகும்போது நம் காரின் ஓசை நமக்கு பழகிவிடும். பொதுவாக ஆட்டோ ட்ரான்ஸ்மிஷன் வாகனங்களில் ஒருவிதமான ஓசை வரும். அது வண்டு ரீங்காரமிடுவது போலவோ முனுமுனுப்பது போலவோ இருக்கும். இதுவே மானுவல் கியரில் குறிப்பான ஒரு ஓசையையும் உணர்வையும் கியர் மாற்றும்போது பெறமுடியும். கியர் மாற்றும்போது நறநறவென்றோ, களக்கென்றோ ஒலி ஏற்பட்டால் அது ட்ரான்மிஷன் பிரச்சனையாக இருக்கலாம். அதை உடனடியாக கவனிக்க வேண்டும். நறநற ஓசை கியர் மாற்றும்போது அல்லாமல் வண்டியின் அடியிலிருந்து கேட்டால் அது சிவி ஜாயின்ட்அல்லது டிஃபரன்ஷியல் பிரச்சனையாக இருக்கலாம்.
கருகும் வாசனை
ட்ரான்ஸ்மிஷன் மிகவும் சூடேறிவிட்டால் ட்ரான்மிஷன் ஆயில் எரிந்து ஒரு விதமான கருகும் அல்லது தீயும் வாசனையை ஏற்படுத்தும். ட்ரான்ஸ்மிஷன் ஆயில் தான் கியர் சிஸ்டத்தில் உள்ள பாகங்கள் சரியாக வேலை செய்வதற்கு உதவி புரிகிறது. மேலும் இப்பாகங்கள் சூடாகமாலும் பார்த்துக்கொள்கிறது. இந்த ஆயில் குறைவானல், பாகங்களின் உராய்வினால் சூடு உண்டாகி கியர் ஆயிலே எரிந்துவிடும் அபாயம் உண்டாகலாம். எனவே கருகும் வாசனையை உணர்ந்து உடனே ட்ரான்ஸ்மிஷன் ஆயிலை பரிசோதிப்பது நல்லது. ஆயில் அழுக்காக இருந்தாலும் மேற்கூரிய பிரச்சனை ஏற்படலாம்.
நியூட்ரல் கியரிலும் ஓசை கேட்கலாம்
சில நேரங்களில் நாம் எதிர்பாராமல் வண்டி நியூட்ரல் கியரில் இருக்கும்போதும் தேவையற்ற ஓசைகள் கேட்கலாம். இது சாதாரணமாக ட்ரான்ஸ்மிஷன் ஆயில் சரியில்லையென்றாலும், குறைவாக இருந்தாலும் கூட ஏற்படலாம். இப்பிரச்சனை சாதாரணமாக தீர்க்கக்கூடிய செலவு குறைவானதாகும். ஆனால் இவ்வறிகுறிக்கு வேறு பிரச்சனையும் காரணமாக இருக்கலாம். ரிவர்ஸ் கியர் தேய்மானம் அல்லது பேரிங் தேய்மானம் மற்றும் கியர் பல்லின் தேய்மானமும் காரணமாக இருக்கலாம். அப்படியிருந்தால் அப்பாகங்களை மாற்ற வேண்டிய சூழல் ஏற்படலாம்.
கரகரவென்ற ஒலியோ உதறலோ ஏற்படுவது
க்ளட்சை முழுவதுமாய் அழுத்திக் கொண்டு கியர் மாற்றும்போது வண்டியில் ஒரு உதறல் ஏற்பட்டாலோ கரகரவென்று அரையும் ஓசை ஏற்பட்டாலோ உடனடியாய் கவனிக்க வேண்டும். ஏனென்றால் இது க்ளட்ச் ப்ளேட் தேய்மானமாக இருக்கலாம். க்ளட்ச் ப்ளேட்டை மாற்ற வேண்டியோ அல்லது அட்ஜஸ்ட் செய்ய வேண்டியோ இருக்கலாம்.
என்ஜின் லைட் எரிவது
வண்டியில் என்ஜின் லைட் எரிந்தால் (எலக்ட்ரானிக் சென்சார் உள்ள கார்களில்) அது வண்டியின் எந்த பாகத்தில் ஏற்பட்டுள்ள பழுதாலும் இருக்கலாம். காரின் பல பாகங்களில் சென்சார்கள் இருப்பதுபோது ட்ரான்ஸ்மிஷன் சிஸ்டத்தில் உள்ள சென்சார்கள் கியரில் லேசான பழுதோ, அதிர்வோ ஏற்படுவதைக் கூட சமிக்ஞையாக பெற்றுவிடும். நம்முடைய புலன்களுக்கு தெரிவதற்கு முன்பே அவை கண்டுபிடித்து விடுவதால் என்ஜின் லைட் எறிந்தால் அது ட்ரான்ஸ்மிஷன் பிரச்சனையாகவும்இருக்கலாம்.
கியர் ஆயில் கசிவு
கியர் ஆயில் கசிவு ஏற்படுவதை உடனடியாய் கவனிக்க வேண்டும். ஆட்டோமேட்டிக் ட்ரான்ஸ்மிஷன் ஆயில் நல்ல சிவப்பு நிறத்தில், நீர்க்க, லேசான மணத்துடன் இருக்கும். அதன் கசிவை சுலபமாக கண்டுபிடித்து விடலாம் மானுவல் ட்ரான்ஸ்மிஷன் ஆயிலை டிப்ஸ்டிக் கொண்டு ட்ரான்ஸ்மிஷன் கேசில் விட்டுப்பார்த்து தெரிந்துக் கொள்ளலாம். ஆயிலின் அளவு பொதுவாக கியர் உபயோகத்தினால் குறையாது அப்படி குறைந்தால் அது திரவக்கசிவினாலேதான் ஏற்படும். எனவே கசிவு எங்குள்ளதென்பதை மெக்கானிக் மூலமாக தெரிந்து சரிசெய்துக் கொள்ளலாம். வண்டியின் ட்ரான்ஸ்மிஷன் சரியான முறையில் இயங்கினால் மட்டுமே வண்டியின் என்ஜின் இயக்கமும் சரியாக இருக்கும். நம் பயணமும் சுகமாக இருக்கும். எனவே ட்ரான்ஸ்மிஷன் பழுதை உடனடியாய் கண்டுபிடித்து சரி செய்வதே சிறந்தது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)