பதிவு செய்த நாள்
13 ஜூன்2013
01:48

புதுடில்லி:நாட்டின் தொழில்துறை உற்பத்தி, நடப்பாண்டு ஏப்ரல் மாதத்தில், 2 சதவீதம் என்ற அளவிற்கே வளர்ச்சி கண்டுள்ளது. இது, கடந்தாண்டு இதே மாதத்தில், மைனஸ் 1.3 சதவீதம் என்ற அளவில் பின்னடைவை கண்டிருந்தது என, மத்திய புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள் ளது.
மறுமதிப்பீடு:அதேசமயம், சென்ற மார்ச் மாதத்தில், நாட்டின் தொழில்துறை உற்பத்தி, 2.5 சதவீதம் வளர்ச்சி கண்டி ருந்தது என, தற்காலிக மதிப்பீட்டில் குறிப்பிடப்பட்டிருந்தது. ஆனால், இது, 3.4 சதவீதம் என்ற அளவில் வளர்ச்சி கண்டுள்ளதாக,மறுமதிப்பீட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.மின்சாரம், சுரங்கம், பொறியியல் ஆகிய துறைகளின் உற்பத்தி குறைந்துள்ளதை அடுத்து, சென்ற ஏப்ரலில், நாட்டின் தொழில்துறை உற்பத்தி, முந்தைய மாதத்தை காட்டிலும் குறைந் துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்ற 2012-13ம் முழு நிதியாண்டில்,தொழில்துறை உற்பத்தி, தற்காலிக மதிப்பீட்டில், ஒரு சதவீதமாக உள்ளது என, தெரிவிக்கப்பட்டிருந்தது. இது, மறுமதிப்பீட்டில், 1.1 சதவீதம் என்ற அளவில் வளர்ச்சி கண்டுள்ளதாக தெரிவிக்கப் பட்டுள்ளது.கடந்த 2011-12ம் நிதியாண்டில், நாட்டின் தொழில்துறை உற்பத்தி, 2.9 சதவீதம் என்ற அளவில் வளர்ச்சி கண்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
பின்னடைவு:சென்ற ஏப்ரல் மாதத்தில், தயாரிப்பு துறை உற்பத்தி, 2.8 சதவீதம் என்ற அளவில் வளர்ச்சி கண்டுள்ளது. இது, கடந்தாண்டு இதே மாதத்தில், மைனஸ் 1.8 சதவீதம் என்ற அளவில் பின்னடைவை கண்டிருந்தது.சென்ற 2012-13ம் முழு நிதிஆண்டில், இத்துறை, 1.2 சதவீதம் என்ற அளவில் வளர்ச்சி கண்டிருந்தது.
தொழில்துறை உற்பத்தி குறியீட்டு எண் கணக்கிடுவதில், தயாரிப்பு துறை, 75 சதவீதத்திற்கும் அதிகமான பங்களிப்பை கொண்டுள்ளது.நடப்பாண்டு ஏப்ரலில், மின் துறை உற்பத்தி, 0.7 சதவீதம் என்ற அளவிற்கே வளர்ச்சி கண்டுள்ளது. இது, கடந்தாண்டு இதே மாதத்தில், 4.6 சதவீதம் என்ற அளவில் சிறப்பாக உயர்ந்து காணப்பட்டது. சென்ற முழு நிதி யாண்டில், இத்துறை, 4 சதவீதம் என்ற அளவில் வளர்ச்சி கண்டுள்ளது.அதேசமயம், சுரங்கத்துறை உற்பத்தி, சென்ற ஏப்ரல் மாதத்தில், மைனஸ் 3 சதவீதம் என்ற அளவில் மிகவும் பின்னடைவை கண்டுள்ளது. இது, கடந்தாண்டு இதே மாதத்தில், மைனஸ் 2.8 சதவீதம் என்ற அளவில் பின்னடைந்திருந்தது.
சென்ற 2012-13ம் முழு நிதியாண்டிலும் இத்துறை, மைனஸ் 2.4 சதவீதம் என்ற அளவில் சரிவடைந்திருந்தது. பொறியி யல் துறைகடந்த ஏப்ரல் மாதத்தில், பொறியியல் துறை உற்பத்தி, 1 சதவீதம் என்ற அளவில் மட்டுமே வளர்ச்சி கண்டுள் ளது. அதேசமயம், கடந்தாண்டு இதே மாதத்தில், இத்துறை, 21.5 சதவீதம் என்ற அளவில் சரிவடைந்து காணப்பட்டது. மதிப்பீட்டு மாதத்தில், நுகர் பொருட்கள் துறை உற்பத்தி, 2.8 சதவீதம் என்ற அளவில் வளர்ச்சி கண்டுள்ளது. இது, கடந்தாண்டு இதே மாதத்தில், 3.7 சதவீதம் என்ற அளவில் அதிகரித்து காணப்பட்டது.
நுகர்வோர் சாதனம்:அதேசமயம், நுகர்வோர் சாதனங்கள் துறை உற்பத்தி, சென்ற ஏப்ரலில், 8.3 சதவீதம் என்ற அளவில் சிறப்பாக வளர்ச்சி கண்டுள்ளது. இது, கடந்தாண்டு இதே மாதத்தில், 5.4 சதவீதம் என்ற அளவில் குறைந்து காணப்பட் டது.இடைநிலைப் பொருட்கள் உற்பத்தி, மதிப்பீட்டு மாதத்தில், 2.4 சதவீதம் என்ற அளவில் வளர்ச்சி கண்டுள்ளது.
இது, கடந்தாண்டு இதே மாதத்தில், 1.8 சதவீதம் என்ற அளவில் சரிவடைந்து காணப்பட்டது.இவ்வாறு அறிக்கையில்
தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|