வர்த்தக எரிவாயு சிலிண்டர் விலை ரூ.59 உயர்வு:சர்வதேச சந்தையில் விலை அதிகரிப்பால்...வர்த்தக எரிவாயு சிலிண்டர் விலை ரூ.59 உயர்வு:சர்வதேச சந்தையில் விலை ... ... விமான எரிபொருள் விலை5.8 சதவீதம் உயர்ந்தது விமான எரிபொருள் விலை5.8 சதவீதம் உயர்ந்தது ...
ஆசிய நாடுகளின் கரன்சிகளில் ரூபாய் மதிப்பு கடும் வீழ்ச்சி
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

02 ஜூலை
2013
00:39

மும்பை:அமெரிக்க டாலருக்கு எதிரான ஆசிய நாடுகளின் கரன்சிகளின் மதிப்பில், இந்திய ரூபாய் தான் மிக கடுமையாக வீழ்ச்சி கண்டுள்ளது.நடப்பு 2013-14ம் நிதியாண்டின், ஏப்ரல் முதல் மே வரையிலான முதல் காலாண்டில், டாலருக்கு எதிரான ரூபாய் மதிப்பு, 8.6 சதவீதம் சரிவடைந்துள்ளது.அன்னிய முதலீடுகள்:அமெரிக்க மத்திய வங்கி, பொருளாதார ஊக்குவிப்பு திட்டத்தை நிறுத்த உள்ளதாக வெளியான தகவல், சீனாவின் நிதி நெருக்கடி போன்றவற்றால், இந்தியாவில் மேற்கொண்ட அன்னிய முதலீடுகள் அதிக அளவில் திரும்பப் பெறப்பட்டு வருகின்றன.
சென்ற ஜூன் மாதம் மட்டும், இந்திய கடன் பத்திரங்கள் மற்றும் பங்குகளில் செய்துள்ள முதலீட்டில், 700 கோடி டாலரை, அன்னிய நிதி நிறுவனங்கள் திரும்பப் பெற்றுள்ளன. டாலருக்கான தேவை:இதனால், கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு, ரூபாய் மதிப்பு, வீழ்ச்சி கண்டு உள்ளது.கடந்த ஜூன் 26ம் தேதி, இறக்குமதியாளர்களுக்கு, மாத இறுதிக்கான டாலர் தேவை :அதிகரித்து காணப்பட்டது.
அதே சமயம், அன்னிய நிதி நிறுவனங்கள், அதிக அளவில் பங்குகளையும், கடன்பத்திரங்களையும் விற்பனை செய்தன. இதனால், அன்று, வரலாறு காணாத அளவில், டாலருக்கு எதிரான ரூபாய் மதிப்பு, 60.72 ஆக வீழ்ச்சி கண்டது.நடப்பாண்டு ஜனவரி முதல், அன்னிய நிதி நிறுவனங்கள், கிட்டத்தட்ட, 1,500 கோடி டாலரை நிதிச் சந்தையில் முதலீடு செய்துள்ளன. அதே சமயம், கடந்த மே 27ம் தேதி முதல், ஜூன் இறுதி வரை, 800 கோடி டாலர் அளவிலான முதலீடுகளை அன்னிய நிதி நிறுவனங்கள், திரும்பப் பெற்றுள்ளன.கடந்த ஜுன் 28ம் தேதி, மாத இறுதி வர்த்தக நாளான வெள்ளிக்கிழமை நிலவரப்படி, டாலருக்கு எதிரான ரூபாய் மதிப்பு (59.38), கடந்த காலாண்டில், 8.6 சதவீதமாக சரிவடைந்துள்ளது.
இது, கடந்த 2003ம் ஆண்டுக்கு பிறகு காணப்பட்ட மிகப் பெரிய சரிவாகும்.தாய்லாந்து:மதிப்பீட்டு காலாண்டில், அமெரிக்க டாலருக்கு எதிரான தாய்லாந்தின் பாத் கரன்சி, 5.8 சதவீதமும், பிலிப்பைன்சின் நாட்டின் பெசே, 5.6 சதவீதமும் சரிவடைந்துள்ளன.அடுத்த இடங்களில், தென்கொரியாவின் வொன் (2.7 சதவீதம்), சிங்கப்பூர் டாலர் (1.9 சதவீதம்), மலேசியாவின் ரிங்கிட் (2.5 சதவீதம்) ஆகிய நாடுகளின் கரன்சிகள் உள்ளன.பிரிக் நாடுகளை பொறுத்தவரை, இந்தியாவை அடுத்து, ரஷ்யாவின் ரூபிள், தென்னாப்ரிக்காவின் ரன்ஸ், பிரேசிலின் பெசோ ஆகிய கரன்சிகளின் வெளிமதிப்பு குறைந்துள்ளது.
நேற்றைய நிலவரம் :நடப்பு ஜூலை மாதம், வாரத்தின் துவக்க வர்த்தக தினமான நேற்று, அமெரிக்க டாலருக்கு எதிரான ரூபாய் மதிப்பு, 0.14 காசு சரிவடைந்து, 59.52 ஆக இருந்தது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)