பதிவு செய்த நாள்
13 ஜூலை2013
17:00
புதுடில்லி: நாட்டின் தொழில்துறை உற்பத்தி மே மாதத்தில் 1.6 சதவீதம் குறைந்துள்ளது. பொறியியல் துறையில் மே மாதத்தில் உற்பத்தி 2.7 சதவீதம் சரிவடைந்துள்ளது. சென்ற ஆண்டின் இதே மாதத்தில் இந்த உற்பத்தி 8.6 சதவீதம் குறைந்து இருந்தது. தொழில் துறை உற்பத்தியை கணக்கிடுவதில் உற்பத்தி துறையின் பங்களிப்பு 75 சதவீதமாக உள்ளது. மே மாதத்தில் இத்துறையின் உற்பத்தி 2 சதவீதம் சரிவடைந்தது. சென்ற ஆண்டின் இதே மாதத்தில் இந்த உற்பத்தி 2.6 சதவீதம் உயர்ந்திருந்தது. சுரங்க துறையின் உற்பத்தி 5.7 சதவீதம் குறைந்துள்ளது. சென்ற ஆண்டின் இதே மாதத்தில் இதன் உற்பத்தி 0.7 சதவீதம் குறைந்து இருந்தது. அனைத்து துறைகளின் உற்பத்திக்கு ஆதாரமாக விளங்கும் மின் உற்பத்தி துறையின் 6.2 சதவீதம் உயர்ந்துள்ளது.இது சென்ற ஆண்டின் இதே மாதத்தில் 5.9 சதவீதம் உயர்ந்து இருந்து. ஒட்டுமொத்ததில் 22 தொழில் துறை பிரிவுகளில் 11 துறைகளின் வளர்ச்சி நன்றாக இருந்தது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|