பதிவு செய்த நாள்
14 ஜூலை2013
01:39
புதுடில்லி:நடப்பாண்டு மே மாதத்தில், நாட்டின் தொழில் துறை உற்பத்தி, 1.6சதவீதம் என்ற அளவில் பின்னடைவை கண்டுள்ளது.
அதேசமயம், இது, கடந்த 2012ம் ஆண்டு இதே மாதத்தில்,2.5சதவீதம் என்ற அளவில் வளர்ச்சி கண்டிருந்தது.பொருளாதார மந்த நிலை மற்றும் கடனுக்கான வட்டி விகிதம் அதிகமாக இருப்பது போன்றவற்றால், நாட்டின் தொழில்துறை தேக்கமடைந்து உள்ளது. இதன் காரணமாகவே, பல துறைகளின் உற்பத்தி வளர்ச்சி, பின்னடைவை கண்டுள்ளது.
வளர்ச்சி:நடப்பாண்டின் ஏப்ரல்,மே ஆகிய இரு மாதங்களிலும், தொழில் துறை உற்பத்தி வளர்ச்சி,0.1சதவீதம் என்ற அளவில் குறைந்துள்ளது.இது, கடந்தாண்டின் இதே இரு மாதங்களில், 0.6சதவீதம் என்ற அளவில்சற்று அதிகரித்து காணப்பட்டது என, மத்திய புள்ளியியல் துறை வெளியிட்டுள்ள புள்ளிவிவரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மதிப்பீட்டு மாதத்தில்,தயாரிப்பு மற்றும்சுரங்கம், பொறியியல்,நுகர் பொருட்கள்,நுகர்வோர்சாதனங்கள் ஆகிய துறைகளின் உற்பத்தி பெருமளவில் வீழ்ச்சி கண்டுள்ளது.
சென்றமே மாதத்தில், தயாரிப்புதுறையின் உற்பத்தி,மைனஸ் 2சதவீதம் என்றஅளவில் பின்னடைவை கண்டுள்ளது.இது, கடந்தாண்டு இதே மாதத்தில், 2.6சதவீதம் என்ற அளவில் வளர்ச்சி கண்டிருந்தது.இதே போன்று, சுரங்கத் துறையின் உற்பத்தியும், மைனஸ் 5.7 சதவீதம் என்ற அளவில் மிகவும் சரிவடைந்து உள்ளது. இது, கடந்தாண்டின் இதே மாதத்தில், மைனஸ் 0.7சதவீதம் என்ற அளவில் இருந்தது.
மின் துறையின் உற்பத்தி,சென்ற மே மாதத்தில்,6.2 சதவீதம் என்ற அளவில் உயர்ந்துள்ளது. இது,கடந்தாண்டின் இதே மாதத்தில், 5.9சதவீதம் என்ற அளவில் வளர்ச்சி கண்டிருந்தது.நடப்பு நிதியாண்டின், ஏப்ரல்மற்றும் மே ஆகிய இரு மாதங்களில்,மின் துறையின் உற்பத்தி, 5.3சதவீதம் என்ற அளவில் வளர்ச்சி கண்டு உள்ளது.இந்த வளர்ச்சி, கடந்த நிதிஆண்டின் இதே இரு மாதங்களில், 5.2சதவீதம் என்ற அளவில் காணப்பட்டது.
பொறியியல் துறையின் உற்பத்தி, கணக்கீட்டு மாதத்தில், மைனஸ் 2.7சதவீதம் என்ற அளவில் குறைந்து உள்ளது. அதே சமயம், கடந்தாண்டின் இதே மாதத்தில், இத்துறையின் உற்பத்தி, மைனஸ் 8.6சதவீதம் என்ற அளவில் மிகவும் பின்னடைவை கண்டிருந்தது.
நுகர்வோர்சாதனங்கள்:சென்ற மே மாதத்தில்,நுகர்வோர்சாதனங்கள் துறையின் உற்பத்தி, மைனஸ் 10.4சதவீதம் என்ற அளவில் பின்னடைவை கண்டு உள்ளது. அதேசமயம், கடந்தாண்டின் இதே மாதத்தில், இத்துறையின் உற்பத்தி வளர்ச்சி,9.7சதவீதம் என்ற அளவில் அதிகரித்து காணப்பட்டது.இதரசாதனங்கள் துறையின் உற்பத்தி வளர்ச்சி, நடப்பாண்டு மே மாதத்தில், 1.7சதவீதம் என்ற அளவில் வளர்ச்சி கண்டுள்ளது.
அதேசமயம், கடந்தாண்டு இதே மாதத்தில், இத்துறையின் உற்பத்தி, மைனஸ் 0.1 சதவீதம் என்ற அளவில் பின்னடைவை கண்டிருந்தது. இடைநிலைபொருட்கள் துறையின் உற்பத்தி வளர்ச்சி, 1.5சதவீதம் என்ற அளவில் குறைந்துள்ளது. இது,கடந்தாண்டின் இதே மாதத்தில், 3.4 சதவீதம் என்ற அளவில் சற்று அதிகரித்திருந்தது.
அடிப்படை பொருட்கள் துறையின் உற்பத்தி, நடப்பாண்டு மே மாத்தில், மைனஸ் 0.4 சதவீதம் என்ற அளவில் பின்னடைவை கண்டுள்ளது. அதேசமயம் அதே சமயம் கடந்தாண்டின் இதே மாதத்தில், இத்துறையின் உற்பத்தி, 4.4 சதவீதம் என்ற அளவில் வளர்ச்சி கண்டிருந்து.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|