பதிவு செய்த நாள்
15 ஜூலை2013
14:07

புதுடில்லி : ஜூன் மாதத்துக்கான நாட்டின் பணவீக்கம் 4.86 சதவீதமாக அதிகரித்துள்ளது. மொத்த விலை குறியீட்டின் அடிப்படையில் ஒவ்வொரு மாதமும் பணவீக்கம் வெளியிடப்பட்டு வருகிறது. அதன்படி கடந்த மே மாதம் 4.70 சதவீதமாக இருந்த பணவீக்கம் ஜூன் மாதத்தில் 4.86 சதவீதமாக உயர்ந்துள்ளது.
இதில் உணவு பொருட்கள் அடிப்படையிலான பணவீக்கம் 9.74 சதவீதமாக உயர்ந்துள்ளது. மே-யில் இது 8.25 சதவீதமாக இருந்தது. உணவுப்பொருட்களின் விலை 14.34 சதவீதத்திற்கு உயர்ந்ததால், குறிப்பாக வெங்காயம் 114 சதவீதம், காய்கறிகள் 16.47 சதவீதமும் உயர்ந்ததால் உணவு பணவீக்கம் உயர்ந்துள்ளது.
அதேசமயம் உற்பத்தி தொடர்பான பணவீக்கம் 2.75 சதவீதமாக சரிந்துள்ளது. மேயில் இது 3.11 சதவீதமாக இருந்துள்ளது. உணவுப்பொருள் அல்லாத பைபர், கச்சா எண்ணெய், கனிமங்கள் தொடர்பான பணவீக்கம் 7.57 சதவீதமாக உயர்ந்துள்ளது. மேயில் இது 4.88 சதவீதமாக இருந்தது.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|