ரிசர்வ் வங்கி தலையிட்டதால் ரூபாய் மதிப்பு உயர்ந்ததுரிசர்வ் வங்கி தலையிட்டதால் ரூபாய் மதிப்பு உயர்ந்தது ... தங்கம் விலையில் வீழ்ச்சி - சவரனுக்கு ரூ.280 குறைந்தது தங்கம் விலையில் வீழ்ச்சி - சவரனுக்கு ரூ.280 குறைந்தது ...
"தினமலர்' வீட்டு உபயோகப் பொருட்கள் கண்காட்சி இன்று துவங்குகிறது
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

01 ஆக
2013
11:00

மதுரை :புதுமையை விரும்பும் உங்களை, ஆண்டுதோறும் புதுப்பித்து வரும் "தினமலர்' வீட்டு உபயோகப் பொருட்களின் கண்காட்சி, மதுரை தமுக்கம் மைதானத்தில் இன்று (ஆக.,1)கோலாகலமாக துவங்குகிறது. மதுரையில், நுகர்வோரின் குதிரை வேகத் தேடலுக்கு சரியான களம், "தினமலர்' வீட்டு உபயோகப் பொருட்கள் கண்காட்சி. ஒவ்வொரு ஆண்டும், புதுமை படைக்கும் இக்கண்காட்சி, இன்று துவங்கி, ஆக., 5 வரை, காலை 10.30 முதல் இரவு 8 மணி வரை நடக்கிறது. 300க்கும் மேற்பட்ட குளுகுளு "ஏசி' ஸ்டால்களில், உங்கள் "ஷாப்பிங்' கூலாக அமைய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள் ளன. ஒரே கூரையின் கீழ், கண்காட்சி, கட்டடக்கலை,ஆட்டோ மொபைல் என, எண்ணிடலங்கா அம்சங்கள், உங்களை அசத்த காத்திருக்கின்றன. குழந்தைகளுக்கு "கிட்ஸ் ஜோன்', இளம்பெண்களுக்கு "டாட்டூ ஜோன்', இயற்கை விரும்பிகளுக்கு அரியவகை கடல் மீன்களின் கண்காட்சி, "பப்பி' பாசம் கொண்டவர்களுக்கு நாய்கள் கண்காட்சி, என, ஒவ்வொரு தரப்பினருக்கும், அவர்களின் தேவை பூர்த்தியாவது உறுதி. வெளிநாடு, வெளிமாநில ஸ்டால்களின் அணிவகுப்பு, உங்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தும். "பாதுகாப்பாக சமைக்க பாத்திரங்கள், மதிப்பெண் அள்ள உதவும் புத்தகங்கள், நகங்களுக்கு நவரசம் தரும் "நெயில் ஆர்ட்', பவுண்டரிகளை பறக்கவிடும் கிரிக்கெட் பவுலிங் மிஷன்,' என, பட்டியலில் அடக்க முடியாத அளவிற்கு, சிறப்பு அம்சங்கள் நிறைய உள்ளன.

ஆடி முழுக்க இருக்கும் தள்ளுபடியை, ஒரு வாரத்திலேயே உங்களுக்கு வாரி வழங்க காத்திருக்கிறது, இக்கண்காட்சி. தள்ளுமுள்ளு இன்றி, தள்ளுபடி விலையில் கிடைக்கும் பொருட்களை வாங்க, யாருக்கு தான் மனம் வராது. அதுவும் ஒரே இடத்தில் என்றால், சொல்லவே வேண்டாம். சுடச்சுட... திண்டுக்கல் வேணு பிரியாணி, பார்க்கும் போதே பசியை தூண்டும் "டோமினோ பீசா', குளுகுளு ஐஸ்கிரீம்கள், நொறுநொறு ஸ்நாக்ஸ்கள் என, உங்கள் குடும்பத்தின் ஒட்டுமொத்த தேவை யும், ஒரே இடத்தில் நிறைவேற இக்கண்காட்சி உதவும். புறப்படுங்கள்... 5 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு கட்டணம் ரூ.30 மட்டுமே. "தினமலர்' உடன் இக்கண்காட்சியை எல்.ஜி., பெஸ்ட் ஷாப் மற்றும் மீனாட்சி பேன் ஹவுஸ் இணைந்து வழங்குகின்றன.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)