பதிவு செய்த நாள்
30 ஆக2013
10:08

சர்வதேச சந்தையில் அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு இன்று 67.31 ஆக சரிந்துள்ளதன் எதிரொலியாக பங்குச் சந்தைகள் சரிவுடன் துவங்கி உள்ளன. இன்றைய வர்த்தக நேர துவக்கத்தின் போது சென்செக்ஸ் 67 புள்ளிகள் சரிந்து 18,333.61 புள்ளிகளாகவும், நிப்டி 28.30 புள்ளிகள் சரிந்து 5,380.75 புள்ளிகளாகவும் உள்ளன. பங்கு வர்த்தகம் நேற்று ஓரளவிற்கு நன்கு இருந்தது. சாதகமான சர்வதேச நிலவரம், டாலருக்கு எதிரான ரூபாய் மதிப்பின் உயர்வு மற்றும் அன்னிய நிதி நிறுவனங்கள், பங்குகளில் அதிகளவில் முதலீடு மேற்கொண்டது போன்றவற்றால், "சென்செக்ஸ்' 2.25சதவீதம் ஏற்றத்துடன் முடிவுஅடைந்தது. அமெரிக்க பொருளாதார வளர்ச்சி குறித்த எதிர்பார்ப்பால், ஐரோப்பா மற்றும் இதர ஆசிய பங்குச்சந்தைகளிலும், வர்த்தகம் சற்று சூடுபிடித்து காணப்பட்டது.நேற்றைய வியாபாரத்தில், அனைத்து துறைகளைச் சேர்ந்த நிறுவனப் பங்குகளும், அதிக விலைக்கு கைமாறின. குறிப்பாக, எண்ணெய், எரிவாயு, உலோகம், பொறியியல், நுகர்பொருட்கள் ஆகிய துறைகளைச் சேர்ந்த நிறுவனப் பங்குகளுக்கு அதிக தேவை காணப்பட்டது.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|