பதிவு செய்த நாள்
13 செப்2013
10:58

மும்பை: இந்திய பங்குச்சந்தை வாரத்தின் இறுதி நாளான இன்று சரிவுடன் தொடங்கியுள்ளது. இன்றைய வர்த்தக நேர தொடக்கத்தின் போது, மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 47.94 புள்ளிகள் குறைந்து 19733.94 புள்ளிகளோடு காணப் பட்டது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிப்டி 22.70 புள்ளிகள் குறைந்து 5828.00 புள்ளிகளோடு காணப்பட்டது. நாட்டின் பங்கு வியாபாரம், நேற்று மிகவும் மோசமாக இருந்தது. சர்வதேச நிலவரம் மற்றும் சில்லரை முதலீட்டாளர்கள் லாப நோக்கம் கருதி, அதிகளவில் பங்குகளை விற்பனை செய்தது போன்வற்றால், "சென்செக்ஸ்' 1.08 சதவீதம் சரிவுடனும், "நிப்டி', 1.06 சதவீதம் சரிவுடனும் முடிவடைந்தன.ஐரோப்பா மற்றும் இதர ஆசியப் பங்குச் சந்தைகளிலும், வர்த்தகம் சுணக்கமாகவே இருந்தது. இதுவும், இந்திய பங்குச் சந்தைகளில் தாக்கத்தை ஏற்படுத்தியது
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|