அமெரிக்கப் பொருளாதாரம் முடங்கும் அபாயம்அமெரிக்கப் பொருளாதாரம் முடங்கும் அபாயம் ... அன்­னிய நேரடி முத­லீடு 50 சத­வீதம் வளர்ச்சி அன்­னிய நேரடி முத­லீடு 50 சத­வீதம் வளர்ச்சி ...
பண­வீக்கம் 6.46 சத­வீ­த­மாக அதி­க­ரிப்பு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

15 அக்
2013
00:08

புது­டில்லி : மொத்த விலை குறி­யீட்டு எண் அடிப்­ப­டையில் கணக்­கி­டப்­படும், நாட்டின் பொதுப் பண­வீக்கம், சென்ற செப்­டம்பர் மாதத்தில், 6.46 சத­வீ­த­மாக அதி­க­ரித்­துள்­ளது என, மத்­திய அரசு வெளி­யிட்­டுள்ள புள்­ளி­வி­வ­ரத்தில் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது. கடந்த ஜூலை மாதத்தில், நாட்டின் பொதுப் பண­வீக்கம், 5.85 சத­வீ­த­மாக இருந்­தது. இது, ஆகஸ்ட் மாதத்தில், 6.1 சத­வீ­த­மாக அதி­க­ரித்­தது. வட்டி விகிதம் வங்கி மற்றும் சந்தை வட்­டா­ரத்­தினர், வங்­கி­க­ளுக்­கான வட்டி விகிதம் குறைக்­கப்­படும் என்று எதிர்­பார்த்த நிலையில், பண­வீக்கம் அதி­க­ரித்­ததால், ரிசர்வ் வங்­கியின் புதிய கவர்­ன­ராக பொறுப்­பேற்ற ரகுராம் ராஜன், சென்ற மாதம் 20ம் தேதி, "ரெப்போ" வட்டி விகி­தத்தை, 0.25 சத­வீதம் உயர்த்­தினார்.
இதை­ய­டுத்து, வங்­கிகள் குறைந்த கால அடிப்­ப­டையில், ரிசர்வ் வங்­கி­யி­ட­மி­ருந்து பெறும் கட­னுக்­கான வட்டி விகிதம் (ரெப்போ) 7.25 சத­வீ­தத்­தி­லி­ருந்து, 7.50 சத­வீ­த­மாக உயர்த்­தப்­பட்­டது. இருப்­பினும், தின­சரி கட­னுக்­கான வட்டி விகிதம், 10.25 சத­வீ­தத்­தி­லி­ருந்து, 9 சத­வீ­த­மாக குறைக்­கப்­பட்­டது. சென்ற செப்­டம்­பரில், வெங்­கா­யத்தின் விலை, ஆண்டு கணக்கில், 323 சத­வீதம் அதி­க­ரித்­தி­ருந்­தது. இதுவே, பொதுப் பண­வீக்கம் அதி­க­ரிப்­பிற்கு முக்­கிய காரணம் என, கூறப்­ப­டு­கி­றது.
இது தவிர, காய்­க­றி­களின் விலை, 89.37 சத­வீதம் என்ற அள­விலும், பழங்­களின் விலை, 13.54 சத­வீதம் என்ற அள­விலும் அதி­க­ரித்­தி­ருந்­தது. கணக்­கீட்டு மாதத்தில், உணவு பண­வீக்கம், 18.40 சத­வீ­த­மாக அதி­க­ரித்­துள்­ளது. இது, இதற்கு முந்­தைய ஆகஸ்ட் மாதத்தில், 18.18 சத­வீ­த­மாக காணப்­பட்­டது.கணக்­கீட்டு மாதத்தில், இயற்கை எரி­வாயு மற்றும் பெட்ரோல் ஆகி­ய­வற்றின் விலை முறையே, 9 சத­வீதம் மற்றும் 9.64 சத­வீதம் என்ற அளவில் அதி­க­ரித்­தி­ருந்­தது. இருப்­பினும், முட்டை, இறைச்சி, மீன்கள், குளிர்­பானம் உள்­ளிட்ட தயா­ரிப்பு பொருட்கள், புகை­யிலை பொருட்கள் போன்­ற­வற்றின் விலை குறைந்­தி­ருந்­தது.
தயா­ரிப்பு துறை சார்ந்த பண­வீக்கம், கணக்­கீட்டு மாதத்தில், ஆண்டுக் கணக்கில், 2.03 சத­வீதம் அதி­க­ரித்­தி­ருந்­தது. சில்லரை பணவீக்கம்ரிசர்வ் வங்­கியின் இரண்­டா­வது காலாண்­டிற்­கான நிதி ஆய்வு கொள்கை, இம்­மாதம், 29ம் தேதி அறி­விக்­கப்­பட உள்­ளது. பண­வீக்கம் அதி­க­ரித்­துள்­ளதால், வங்­கி­க­ளுக்­கான வட்டி விகிதம் குறைக்­கப்­ப­டுமா என்­பது கேள்­விக்­கு­றி­யாக உள்­ளது. இதற்­கி­டையே, நுகர்­பொருள் குறி­யீட்டு எண் அடிப்­ப­டையில் கணக்­கி­டப்­படும், சில்­லரை பண­வீக்கம், சென்ற செப்­டம்­பரில், 9.84 சத­வீதம் என்ற அளவில் உயர்ந்­து உள்­ளது. இது, இதற்கு முந்­தைய ஆகஸ்ட் மாதத்தில், 9.52 சத­வீதம் என்ற அளவில் இருந்­தது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)