அன்னிய செலாவணி கையிருப்பு269 கோடி டாலர் அதிகரிப்புஅன்னிய செலாவணி கையிருப்பு269 கோடி டாலர் அதிகரிப்பு ... ரூபாயின் மதிப்பில் உயர்வு - ரூ.62.31 ரூபாயின் மதிப்பில் உயர்வு - ரூ.62.31 ...
புதிய வங்கி துவங்குவதிலிருந்து நிறுவனங்கள் ஓட்டம்:ரிசர்வ் வங்கியின் விதிமுறைகளால்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

02 டிச
2013
06:05

மும்பை:உள்நாட்டில், அனைத்து தரப்பு மக்களுக்கும் வங்கிச் சேவை கிடைக்க வேண்டும் என்ற நோக்கத்தில், புதிய வங்கிக்கான உரிமம் வழங்கும் அறிவிப்பை, ரிசர்வ் வங்கி, கடந்த சில மாதங்களுக்கு முன்பு ெவளியிட்டது.இதையடுத்து, 25க்கும் மேற்பட்ட நிறுவனங்கள், புதிதாக வங்கி துவங்குவதற்கு, உரிமம் வேண்டி, விண்ணப்பித்தன.ஆனால், ரிசர்வ் வங்கியின், கடுமையான நெறிமுறைகளால், வங்கி துவங்குவதற்கு விண்ணப்பித்த பல நிறுவனங்கள், இத்திட்டத்திலிருந்து விலகிக் கொள்வதாக அறிவித்துள்ளன. மேலும் சில நிறுவனங்கள், இதே மன நிலையில் இருப்பதாக தெரியவந்துள்ளது.
ரூ.500கோடி மூலதனம்:ரிசர்வ் வங்கியின் நெறிமுறைப்படி, புதிய வங்கி துவங்கும் குழுமம், அதன் வங்கி சாராத துணை நிறுவனத்தின் மூலம், இதற்கு விண்ணப்பிக்க வேண்டும். குறைந்தபட்சம், 500 கோடி ரூபாய் மூலதனம் மேற்கொள்ளவேண்டும்.
இது தவிர, வங்கிகள் திரட்டும் மொத்த டெபாசிட்டில், 4 சதவீத தொகையை (ரொக்க இருப்பு விகிதம்), ரிசர்வ் வங்கியில் இருப்பு வைக்க வேண்டும். மேலும், 23 சதவீத தொகையை, கட்டாயமாக கடன்பத்திரங்களில் முதலீடு (எஸ்.எல்.ஆர்., ) செய்ய வேண்டும்."மேற்கண்ட விதிமுறைகள், புதிய வங்கி துவங்கும் நிறுவனங்களுக்கு, மிக அதிக செலவினத்தை ஏற்படுத்தும்" என, இத்துறையைச் சேர்ந்த ஆய்வாளர் ஒருவர் தெரிவித்தார்.புதிய வங்கி துவங்கிய உடன், குறைந்த வட்டியில் டெபாசிட் திரட்டுவது என்பது மிகவும் கடினமாக இருக்கும். எல்லாவற்றிற்கும் மேலாக, புதிய வங்கிகள், வழங்கும் மொத்த கடனில், 40 சதவீதத்தை, முன்னுரிமை துறைகளான, விவசாயம், சிறு தொழில்கள், சில்லரை வர்த்தகம், தொழில் வல்லுனர்கள், சுயவேலை வாய்ப்பு பெற்றுள்ள தனி நபர்கள் போன்றவர்களுக்கு வழங்க வேண்டும் என்ற விதிமுறையும், அதிக இடர்பாடு அளிக்கக்கூடியது.
பங்குச்சந்தை:புதிய வங்கி துவங்கிய மூன்று ஆண்டுகளுக்குள், அதன் பங்குகள், பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட வேண்டும்.மேலும், வங்கியில், நிறுவனர்களின் பங்கு மூலதனத்தை, முதலில், 40 சதவீதமாகவும், 10 ஆண்டுகளுக்குள், 20 சதவீதமாகவும், 12வது ஆண்டிற்குள், 15 சதவீதமாகவும் குறைக்க வேண்டும் என, விதிமுறையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேற்கண்ட கடுமையான விதிமுறைகளால், வங்கியில் மேற்கொள்ளும் அதிக முதலீட்டிற்கேற்ற லாபம் கிடைக்காது என்பதுதான், பல நிறுவனங்கள் பின்வாங்க, காரணம் என, இத்துறையைச் சேர்ந்த நிபுணர்கள் தெரிவித்து உள்ளனர்.
ரிலையன்ஸ் குழுமம்:புதிய வங்கி உரிமம் வேண்டி, டாட்டா சன்ஸ், ஆதித்ய பிர்லா, பஜாஜ், அனில் அம்பானியின் ரிலையன்ஸ் போன்ற மிகப்பெரிய குழும நிறுவனங்கள் விண்ணப்பித்திருந்தன.
இவை தவிர, எல் அண்டு டி பைனான்ஸ் ஹோல்டிங்ஸ், ஸ்ரீராம் கேப்பிட்டல், வீடியோகானின் வேல்யூ இண்டஸ்ட்ரீஸ், ரெலிகர் எண்டர்பிரைசஸ், ஐ.டீ.எப்.சி., இந்தியா புல்ஸ் ஹவுசிங் பைனான்ஸ், இந்தியா இன்போலைன், மேக்மா பின்கார்ப், எடில்வைஸ் பைனான்சியல் சர்வீசஸ், அஞ்சல் துறையின் இந்தியா போஸ்ட் உள்ளிட்ட, 25 நிறுவனங்கள் விண்ணப்பித்து இருந்தன.இவற்றுள், வீடியோகானின் வேல்யூ இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம் ஏற்கனவே, இத்திட்டத்திலிருந்து ெவளியேறுவதாக அறிவித்தது. தற்போது, டாட்டா சன்ஸ் நிறுவனமும் இத்திட்டத்திலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளது.
மகிந்திரா பைனான்ஸ்:டாட்டா நிறுவனம் மட்டுமின்றி, புதிய வங்கி துவங்கு வதற்கு, முதலில் ஆர்வம் காட்டி வந்த மகிந்திரா அண்டு மகிந்திரா பைனான்சியல் சர்வீசஸ் நிறுவனம், ரிசர்வ் வங்கியின் விதிமுறைகள் ெவளியிட்ட பின்பு, அதாவது, கடந்த ஜுன் மாதத்திலேயே, புதிய வங்கிக்கு உரிமம் வேண்டி விண்ணப்பிக்க போவதில்லை என, அறிவித்தது என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னையைச் சேர்ந்த ஸ்ரீராம் கேப்பிட்டல் நிறுவனமும், விண்ணப்பத்தை திரும்பப் பெற உள்ளதாக, உறுதிபடுத்தப்படாத செய்தி ெவளியாகியுள்ளது.மேலும், பல நிறுவனங்களும், புதிய வங்கி துவங்கும் திட்டத்திலிருந்து ெவளியேற இருப்பதாக சந்தை வட்டாரத்தில் பேசப்படுகிறது.
10 வங்கிகளுக்கு உரிமம்:கடந்த 1994ம் ஆண்டு, ரிசர்வ் வங்கி, தனியார் துறையில், 10 வங்கிகளுக்கு உரிமம் அளித்தது. இதையடுத்து, 2004ம் ஆண்டில், யெஸ் பேங்க் மற்றும் கோட்டக் மகிந்திரா பேங்க் ஆகிய இரு வங்கிகளுக்கு உரிமம் வழங்கப்பட்டது.1969ம் ஆண்டில், முதன் முறையாக, 14 வங்கிகளும், 1980ம் ஆண்டில், மேலும் 6 வங்கிகளும் தேசியமயமாக்கப்பட்டன.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)