பதிவு செய்த நாள்
21 டிச2013
00:10

நடப்பாண்டின் ஜூலை முதல் செப்டம்பர் வரையிலான காலாண்டில், உள்நாட்டில், டேப்லெட் கம்ப்யூட்டர் விற்பனை 12 லட்சத்தை எட்டியுள்ளது.இது, கடந்தாண்டின் இதே காலாண்டில் மேற்கொள்ளப்பட்ட விற்பனையை காட்டிலும், 9 சதவீதம் அதிகமாகும். மேலும், ஏப்ரல் – ஜூன் காலாண்டுடன் ஒப்பிடும் போது, 4.7 சதவீத வளர்ச்சியாகும் என, சி.எம்.ஆர்., ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது.
மதிப்பீட்டு காலாண்டில், 43 உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு நிறுவனங்கள் ‘டேப்லெட்’ கம்ப்யூட்டர் களை விற்பனை செய்துள்ளன. இதில், 13 நிறுவனங்கள் மட்டுமே, 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ‘டேப்லெட்’ கம்ப்யூட்டர்களை விற்பனை செய்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.கணக்கீட்டு காலாண்டில், மொத்த டேப்லெட்’ விற்பனையில், 15 சதவீத பங்களிப்புடன் சாம்சங் முதலிடத்திலும், 13.3 சதவீத பங்களிப்புடன் லெனோவா இரண்டாவது இடத்திலும் உள்ளன.ஆண்ட்ராய்டு இயங்கு தளத்தில் வடிவமைக்கப்பட்ட டேப்லெட்’ கம்ப்யூட்டர்களுக்கு வாடிக்கையாளர்களிடையே அதிக வரவேற்பு காணப்படுகிறது.
இதே போன்று, வின்டோஸ் இயங்கு தளத்தில் செயல்படும் டேப்லெட்களுக்கும் தேவை காணப்படுகிறது. எனவே, வரும் காலாண்டுகளில், இவற்றின் விற்பனை, சிறப்பான அளவில் அதிகரிக்கும்.
– பிசினஸ் ஸ்டாண்டர்ட் உடன் இணைந்து –
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|