பதிவு செய்த நாள்
10 பிப்2014
16:06

டாட்டா குரூப் தலைவராக சைரஸ் மிஸ்ட்ரி சென்ற ஆண்டு பொறுப்பேற்ற பின்னர், தொலை தொடர்பு வர்த்தகத்திலிருந்து டாட்டா குரூப் விலகும் என்ற தகவல் பரவி வருகிறது. டாட்டா கம்யூனிகேஷன்ஸ் மற்றும் டாட்டா டெலி (Tata Communications and Tata Tele) என்ற இரு பெயர்களில், டாட்டா குரூப் தகவல் தொழில் நுட்ப நிறுவனங்களைக் கொண்டுள்ளது. இந்த இரண்டையும் வோடபோன் நிறுவனத்திடம் விற்பனை செய்திட பேச்சு வார்த்தை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
என்.டி.டி. டொகோமோ டாட்டா டெலி நிறுவனத்தில் 26% பங்கினைக் கொண்டுள்ளது. டாட்டா கம்யூனிகேஷன் நிறுவனத்தில் அரசுக்கு 26% பங்கு உள்ளது. இவற்றை விற்பனை செய்திடும் பட்சத்தில், இந்த பங்குகளை டாட்டா குரூப் விலைக்கு வாங்கி, வோடபோன் வசம் அளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த இரண்டு நிறுவனங்களிலும் பங்குதாரர் எண்ணிக்கை அதிகமாக இருப்பதால், இந்த வர்த்தகப் பரிமாற்றம் சற்று மெதுவாகவே நடைபெறும். வோடபோன் டாட்டா டெலி நிறுவனத்தை வாங்கும் பட்சத்தில், அதிக எண்ணிக்கையில் வாடிக்கையாளர்களைக் கொண்ட நிறுவனமாக வோடபோன் இருக்கும்.ஏர்டெல் நிறுவனத்தின் வாடிக்கையாளர் எண்ணிக்கையையும் இது தாண்டிவிடும். ஆனால், இந்த செய்திகள் குறித்து இந்த இரு நிறுவனங்களும் எந்த அதிகார பூர்வமான தகவல்களையும் வெளியிடவில்லை என்பதுவும் இங்கு குறிப்பிடத்தக்கது.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|