பதிவு செய்த நாள்
25 பிப்2014
17:07

மும்பை : தொடர்ந்து மூன்றாவது நாளாக இந்திய பங்குசந்தைகள் ஏற்றத்துடன் முடிந்தன. தகவல்தொழில்நுட்பம், முதலீட்டு தொடர்பான பங்குகள் மற்றும் எப்.எம்.சி.ஜி., பங்குகள் அதிகளவு கொடுத்த விலையேற்றத்தால் இந்திய பங்குசந்தைகள் ஏற்றத்துடன் முடிந்தன. இன்றைய வர்த்தகநேர முடிவில் மும்பை பங்குசந்தையான சென்செக்ஸ் குறியீட்டு எண் 41.03 புள்ளிகள் உயர்ந்து 20,852.47-ஆகவும், தேசிய பங்குசந்தையான நிப்டி 13.95 புள்ளிகள் உயர்ந்து 6,200.05-ஆகவும் முடிந்தன. சென்செக்ஸை அளவிட உதவும் 30 நிறுவன பங்குகளில் 14 நிறுவன பங்குகள் உயர்ந்தும், 15 நிறுவன பங்குகள் சரிந்தும் 1நிறுவன பங்கு மாற்றமின்றியும் முடிந்தன.
இன்றைய வர்த்தகத்தில் விப்ரோ நிறுவன பங்குகள் (2.95 சதவீதம்), டிசிஎஸ்., மற்றும் இன்போசிஸ் நிறுவன பங்குகள்(1 சதவீதம்) உயர்ந்து இருந்தன. இவைகள் தவிர பஜாஜ் ஆட்டோ 2.14 சதவீதமும், எல்அண்ட்டி 0.61 சதவீதமும், ஐடிசி 0.64 சதவீதமும் உயர்ந்து இருந்தன. கோல் இந்தியா 2.26 சதவீதம், என்டிபிசி., 1.07 சதவீதம், டாடா ஸ்டீல் 2.25 சதவீதம் சரிந்தன.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|