பதிவு செய்த நாள்
25 மார்2014
10:13

மும்பை : வாரத்தின் இரண்டாம் நாளான இன்று(மார்ச் 25ம் தேதி) இந்திய பங்குசந்தைகள் சரிவுடன் துவங்கியுள்ளன. முன்னதாக நேற்று இந்திய பங்குசந்தைகள் வரலாறு காணாத அளவுக்கு உயர்வை சந்தித்த நிலையில், ஆசிய பங்குசந்தைகளில் காணப்படும் சரிவு காரணமாகவும், முதலீட்டாளர்கள் லாபநோக்கோடு பங்குகளை விற்பனை செய்து வருவதாலும் இந்திய பங்குசந்தைகளில் சரிவு காணப்படுகின்றன.
இன்றைய வர்த்தகநேர துவக்கத்தில்(காலை 9.15மணி) மும்பை பங்குசந்தையான சென்செக்ஸ் குறியீட்டு எண் 50.34 புள்ளிகள் சரிந்து 22,005.14-ஆகவும், தேசிய பங்குசந்தையான நிப்டி 6.10 புள்ளிகள் சரிந்து 6,577.40-ஆகவும் இருந்தன. இருப்பினும் இந்திய பங்குசந்தைகள் சரிவிலிருந்து மீண்டு வருகின்றன. காலை 10.10 மணியளவில், சென்செக்ஸ் 15 புள்ளிகள் சரிந்தும், நிப்டி 2.10 புள்ளிகள் உயர்ந்தும் இருந்தன.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|