தங்கம் விலை சிறிது உயர்வுதங்கம் விலை சிறிது உயர்வு ... ரூபாய் மதிப்பு 46 காசுகள் உயர்வு ரூபாய் மதிப்பு 46 காசுகள் உயர்வு ...
வர்த்தகம் » ஆட்டோமொபைல்
வாகன செய்திகள்... சுகோய் விமானத்திற்கு எம்.ஆர்.எப். ஏரோமசுல் டயர்கள்!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

25 ஏப்
2014
14:16

இந்திய விமானப்படையைச் சேர்ந்த சுகோய் 30 MKI இன் முக்கிய வீல் டயர்களை எம். ஆர்.எப்., நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. விமானங்களுக்கான டயர் உற்பத்தியில் 2001ம் ஆண்டு முதலிருந்து வரும் எம்.ஆர்.எப்., 2008ம் ஆண்டு முதல் இந்திய விமானப் படையின் சேட்டக் ஹெலிகாப்டருக்கான டயர்களை உற்பத்தி செய்து வருகிறது. தற்போது சுகோய் 30 MKI விமானங்களுக்கான டயர்களை வழங்குகிறது. தரைவேகமாக 4 மணிக்கு 420 கி.மீ., வேகத்தை தாங்கக் கூடியதாகவும், 18 டன்களுக்கும் மேலான எடையை ஒவ்வொரு டயரும் சுமக்கக் கூடியதாகவும் இவை வடிவமைக்கப் பட்டுள்ளன. என்.ஏ.பி.ஏல்., அங்கீகாரம் பெற்ற ஆராய்ச்சி கூடங்கள் கொண்ட இந்திய டயர் உற்பத்தி நிறுவனம் எம்.ஆர்.எப்., என்பதும் இந்த டயர்கள் CEMILAC (விமானப்படை தர அங்கீகார நிறுவனம்) இன் ஒப்புதலை பெற்றுள்ள தும் குறிப்பிடத்தக்கது.
ஹோண்டா ஆமேசின் ஆண்டு நிறைவு வெளியீடு
ஹோண்டா கார்ஸ் இந்தியா தங்களின் அமேஸ் மாடலின் ஆண்டு நிறைவை முன்னிட்டு, "ஆனிவெர்சரி எடிஷன்' ஐ அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த ஆண்டு நிறைவு சிறப்பு வெளியீட்டில் பல்வேறு சிறப்பு அம்சங்களை புகுத்தியுள்ளது ஹோண்டா நிறுவனம். முன்புற அண்டர்-ஸ்பாய்லர். பக்கவாட்டு அண்டர்-ஸ்பாய்லர் மற்றும் பின்புற அண்டர்-ஸ்பாய்லர்களும், கதவுகளில் வைசர்களும், பின்புற எக்ஸாஸ்ட் பைப்பில் பினிஷரும் புதிய அமேஸ் "ஆனிவெர்சரி எடிஷனில்' கொடுக்கப்பட்டுள்ளது. காரின் உட்புறத்திலும் உயர்தர இருக்கைகள், உட்பினிஷ் பேனல் கொண்ட டேஷ்போர்ட் கொடுக்கப்பட்டுள்ளது. "ஆனிவர்சரி எடிஷன்' என்ற சின்னம் பொறிக்கப்பட்டுள்ளன. இந்த சிறப்பு வெளியீடு, 'VX' மற்றும் 'S' வேரியன்ட்களில், பெட்ரோல் மற்றும் டீசல் தேர்வுகளில் கிடைக்கிறது.
மெர்சிடஸ் பென்ஸ் அறிமுகப்படுத்தும் சக்திவாய்ந்த எஸ்.யு.வி.யான ஜிஎல் 63 ஏ.எம்.ஜி (GL63AMG) யை அறகமுகப்படுத்தியுள்ளது
5.5லிட்டர் V8 பைடர்போ இன்ஜின் கொண்டுள்ளது இந்த எஸ்.யு.வி., 410KW சக்தியையும், 760NM இழுப்பு விசையையும் அளிப்பதுடன் C100 கி.மீ., வேகத்தை 4.9 நொடியில் அடைகிறது. மேலும் இதன் அதிகபட்ச வேகம் மணிக்கு 250 கி.மீ., ஆகும். இதிலுள்ள ஏ.எம்.ஜி., ஸ்பீட்ஷிப்ட் பிளஸ் 7ஜி ட்ரானிக் ஆட்டோ ட்ரான்ஸ்மிஷின் மூன்றுவிதமான ஓட்டும் நிலைகளை அளிக்கிறது. சிறப்பான சஸ்பென்ஷனாக ஏ.எம்.ஜி., ரைட் கன்ட்ரோல் ஸ்போர்ட்ஸ் சஸ்பென்ஷன் இதிலுள்ளது. திருப்பங்களில் வண்டி ஆடாமல் இருக்க ஆக்டிட் கர்வ் சிஸ்டம் இதில் உள்ளது. மேலும் இதன் நைட் வ்யூ அசிஸ்ட் இரவு நேர பயண பாதுகாப்பிற்காகவும், ஹர்மன் கார்டன் லாஜிக் மியூசிக் சிஸ்டம் 14 ஸ்பீக்கர் கொண்டதாகவும் மேலும் இதன் ஸ்டார் கேர் பிளஸ் ப்ரோக்ராம் நான்கு ஆண்டு விரிவுபடுத்தப்பட்ட வாரண்டிலும் வருகிறது.

Advertisement

மேலும் ஆட்டோமொபைல் செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)