பதிவு செய்த நாள்
25 ஏப்2014
14:16
வாகனங்களை ஓட்டும் அனுபவத்தை விரும்பும் ஆர்வலர்களுக்கென, ஆடி இந்தியா நிறுவனம் ஆடி க்யூ-டீரைவ் என்ற நிகழ்ச்சியை நடத்தி வருகிறது. இதில், ஆடி க்யூ வரிசை கார்களான, ஆடி க்யூ5 மற்றும் ஆடி க்யூ7 ஆகிய கார்களின், க்வாட்ரோ தொழில் நுட்பத்தின் செயல் திறனை அனுபவிக்கும் வாய்ப்பை, சென்னையில், ஏப்ரல் 12 மற்றும் 13ம் தேதிகளில் நடந்த ஆடி க்யூ-ட்ரைவ், 2014 நிகழ்ச்சியில் ரசிகர்கள் பெற்றனர்.
இந்தியாவின் இளம் கார் ஆர்வலர்களின் அதீத செயல்திறனுடன் கூடிய சொகுசை விரும்பும் ரசனைக்கு தீனி போடும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது ஆடியின் எஸ்.யு.வி.க்கள். க்வாட்ரோ தொழில் நுட்பத்தின் செயல் திறனை கரடுமுரடான சாலைகளிலும், மண் சாலைகளிலும் ஓட்டும் போது முழுமையாக பெற முடிகிறது. இளம் இந்தியர்களின் ரசனை மற்றும் தேவையை அறிந்து வெளி வந்த ஆடி க்யூ 3, ஆடி க்யூ 5 மற்றும் ஆடி க்யூ 7 கார்களுக்கான வரவேற்பையும் இந்த ஆடி க்யூ-ட்ரைவ் கார்களுக்கான வரவேற்பை, இந்த ஆடி க்யூ-ட்ரைவ் 2014 நிகழ்ச்சியில் காண முடிந்தது இந்நிகழ்ச்சி இந்தியாவின் முக்கிய, 30 நகரங்களில் நடத்தப்படுவது குறிப்பிடத்தக்கது.
மேலும் ஆட்டோமொபைல் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|