பதிவு செய்த நாள்
18 மே2014
03:56
சென்னை:சர்வதேச நிலவரங்களால், உயர்ந்து வந்த தங்கம் விலை, மத்தியில், ஆட்சி மாற்றம் ஏற்பட்டதால், அதிரடியாக சரிவடைந்தது.சென்னையில், நேற்று முன்தினம், 22 காரட் ஆபரண தங்கம், ஒரு கிராம், 2,759 ரூபாய்க்கும், ஒரு சவரன், 22,072 ரூபாய்க்கும் விற்பனையானது. 24 காரட் 10 கிராம் சுத்த தங்கம், 29,505 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது.இந்நிலையில், நேற்று, தங்கம் விலை கிராமுக்கு, 14 ரூபாய் குறைந்து, 2,745 ரூபாய்க்கு விற்பனையானது. சவரனுக்கு, 112 ரூபாய் சரிவடைந்து, 21,960 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. 10 கிராம் சுத்த தங்கம், 150 ரூபாய் குறைந்து, 29,355 ரூபாய்க்கு விற்பனையானது.ஒரு கிராம் வெள்ளி, 43.80 ரூபாய்க்கும், ஒரு கிலோ பார் வெள்ளி, 40,975 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது.கடந்த திங்களன்று (12ம் தேதி), ஒரு கிராம் தங்கம், 2,791 ரூபாய்க்கும், ஒரு சவரன், 22,328 ரூபாய்க்கும் விற்பனையானது.ஆக, கடந்த வாரத்தில் மட்டும், தங்கம் விலை கிராமுக்கு, 46 ரூபாயும், சவரனுக்கு, 368 ரூபாயும் குறைந்துள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|